Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சிங்க பெண்ணே சீரியலில் அடுத்த வாரம் பரபரப்பான திருப்பம் நடைபெற இருக்கிறது.
ஆனந்தி எடுத்திருக்கும் முடிவால் அன்பு, மகேஷ் என இரண்டு பேரின் வாழ்க்கையுமே மாற இருக்கிறது. கடந்த வாரம் முழுக்க கம்பெனியில் போட்டி வைத்து சீரியலை சுவாரஸ்யம் ஆக்கினார் இயக்குனர்.
இந்த வாரம் மீண்டும் முக்கோண காதல் கதையை வைத்து ஓட்டி விடுவாரோ என்றுதான் இருந்தது. ஆனால் கதையின் முக்கிய புள்ளியையே தொட்டிருக்கிறார் இயக்குனர்.
துளசியை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஒத்துக் கொள்ள வைத்து தான் மகேஷ் மற்றும் ஆனந்தி அன்புவை அவனுடைய வீட்டிற்கு அனுப்பினார்கள்.
இந்த நேரத்தை சரியாக உபயோகப்படுத்திக் கொண்டார் அன்புவின் அம்மா. அன்புவின் அத்தை மற்றும் மாமாவை ஊரில் இருந்து வரவைத்து நிச்சயதார்த்த வேலைகளை ஆரம்பிக்க இருக்கிறார்.
ஆனந்தி எடுத்த திடீர் முடிவு
அதே நேரத்தில் மகேஷ் தன்னுடைய காதலை ஆனந்தியிடம் நேரடியாக சொல்ல முடிவெடுத்து விட்டான். அன்பு ஆனந்தியிடம் அத்தை மற்றும் மாமா வந்திருப்பதை பற்றி சொல்கிறான்.
அதற்கு ஆனந்தி எந்தவித பதட்டமும் இல்லாமல் அன்புவின் மாமாவை கம்பெனிக்கு அழைத்து வரும்படி சொல்கிறாள்.
அம்மா முன்னாடி காதலை சொன்னால் தான் உங்க அத்தை மாமா கோபப்படுவாங்க. நீங்க உங்க மாமாவை கம்பெனிக்கு கூட்டிட்டு வாங்க அங்க வச்சு நாம பேசலாம் என முடிவெடுத்து இருக்கிறாள்.
அன்பு ஆனந்தியின் முடிவுக்கு சம்மதிப்பது போல் காட்டப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே துளசி அன்பு மீது ஆசை வைத்திருப்பது போல் தான் இதுவரை காட்டப்படுகிறது.
இதனால் ஆனந்தியின் காதலை பற்றி சொன்னால் கண்டிப்பாக துளசியின் அப்பா ஏற்றுக் கொள்ள மாட்டார். ஒருவேளை இவர்கள் காதலிப்பதை பற்றி சொன்னால் பெரிய பிரச்சனை வெடிக்க இருக்கும்.
அதே நேரத்தில் மகேஷுக்கும் இந்த விஷயம் தெரிய வரும். அடுத்த வாரம் அன்பு மற்றும் துளசியின் நிச்சயதார்த்தம் பற்றிய காட்சிகள் தான் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
அதே நேரத்தில் இந்த கேப்பை பயன்படுத்தி மகேஷ் தன்னுடைய காதலை வெளிப்படுத்தவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.