திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

சிங்க பெண்ணில் கர்ப்பமாக இருக்கும் ஆனந்தி? பழியை சுமக்க போகும் அன்பு.. எதிர்பாராத புதிய திருப்பம்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் கடந்த காலத்தில் இருந்து பரபரப்பான திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. மித்ராவின் திட்டப்படி அன்பு மற்றும் ஆனந்தி குடோனுக்குள் சிக்கிக்கொண்டனர்.

இருவரையும் ஒன்றாக பார்த்த மகேஷ் என்ன முடிவெடுக்க போகிறான் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. கருணாகரன் மற்றும் அரவிந்த் இருவரும் இணைந்து அன்பு மற்றும் ஆனந்தியை கம்பெனியை விட்டு வெளியேற்ற வேண்டும் என உறுதியாக நின்றார்கள்.

மித்ரா மட்டும் மகேஷின் முடிவு என்னவாக இருக்கும் என்பது தெரியாததால் கொஞ்சம் அடக்கி வாசித்தால். மகேஷ் முடிவை கம்பெனியில் வேலை செய்பவர்களிடம் கொடுத்து விட்டான். அவர்கள் அன்பு மற்றும் ஆனந்தி தப்பு செய்திருக்க வாய்ப்பே இல்லை என தங்களுடைய ஆதரவை தெரிவித்தார்கள்.

மேலும் மகேஷ் அன்பு மற்றும் ஆனந்தியை பற்றி எனக்கு தெரியும் ஆனால் அவர்களை இனி யாரும் காயப்படுத்தும் படி பேசக்கூடாது என்பதால் தான் எல்லோரையும் அழைத்து முடிவை கேட்டேன் என்று சொன்னான்.

கர்ப்பமாக இருக்கும் ஆனந்தி?

மீண்டும் அன்பு மற்றும் ஆனந்தி வழக்கம்போல தங்களுடைய வேலையை செய்ய கிளம்பி விட்டார்கள். மித்ரா தன்னுடைய திட்டம் தோல்வி அடைந்ததால் பயங்கர அப்செட்டில் இருந்தால்.

அதே நேரத்தில் அன்பு இந்தப் பிரச்சனையை யார் செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்காமல் விடமாட்டான் என்பதால் கருணாகரன் மற்றும் அரவிந்தை உஷாரா இருக்க சொல்லியிருக்கிறாள். அதே நேரத்தில் மகிழ்ச்சி ஆனந்தியிடம் தன் காதலை சொல்வதாக நினைத்து மித்ராவிடம் சொல்கிறான்.

மித்ராவுக்கு இது பெரிய அதிர்ச்சியாக அமைந்து விடுகிறது. கொஞ்சம் கேப் கிடைத்தாலும் மகேஷ் ஆனந்தியிடம் தன்னுடைய காதலை சொல்லி விடுவான் என்பது மித்ராவுக்கு உறுதியாக தெரிந்து விட்டது. அதற்குள் ஏதாவது ஒன்று செய்தாக வேண்டும் என நினைக்கிறாள்.

இனி மித்ராவின் ஆட்டம் தான் ஆரம்பிக்கும் என எதிர்பார்த்தால் ரசிகர்கள் எதிர்பார்க்காத திருப்பம் ஒன்று நடந்திருக்கிறது. அன்புவின் அம்மா ஆனந்தியை நேரில் சந்தித்து இனி நீ அன்புடன் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சொல்கிறார்.

இன்று வெளியாக இருக்கும் ப்ரோமோவில் அன்புவின் அம்மா பேசியதே யோசித்துக் கொண்டு ஆனந்தி சைக்கிளில் வருகிறாள். அப்போது நிலை தடுமாறி மயக்கம் போட்டு கீழே விழும் ஆனந்தியை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள்.

அப்போது ஆனந்தியை பரிசோதித்து பார்த்துவிட்டு வெளியில் வரும் டாக்டர் எல்லோரிடமும் ஒரு விஷயத்தை சொல்கிறார். அதைக் கேட்டு எல்லோருமே அதிர்ச்சி அடைந்து நிற்பது போல் அந்த ப்ரோமோ முடிந்து இருக்கிறது. இந்த விஷயம் என்னவாக இருக்கும் என்பதை ஓரளவுக்கு எல்லோராலும் யூகிக்க முடிகிறது.

கம்பெனி பார்ட்டியின் போது ஆனந்திக்கு மித்ரா கூல்டிரிங்ஸில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து விடுவாள். மயக்கம் அடைந்த ஆனந்தியை ஒரு பெட்ரூமில் படுக்க வைத்திருப்பார்கள். அதே நேரத்தில் வேறு ஒருவருக்கு கொடுக்கும் மயக்க மருந்து கலந்த ஜூஸை மகேஷ் குடித்து விடுவான்.

Singapenne promo
Singapenne promo

அவனும் மயக்கத்தில் அந்த பெட் ரூமுக்கு வந்து ஆனந்தியின் பக்கத்தில் படுத்து விடுவான். திடீரென மித்ரா வந்து பார்க்கும் பொழுது இருவரும் சரியான நிலைமையில் படுத்திருக்க மாட்டார்கள். இதை பார்த்த மித்ரா கதறி அழுத உடனே ஆனந்தியை அந்த ரூமில் இருந்து அப்புறப்படுத்தி விடுவாள்.

மித்ராவின் யூகம் சரியாக இருந்ததென்றால் மகேஷ் ஆனந்தியிடம் தவறாக நடந்து இருப்பான். அப்படி பார்த்தால் தற்போது அந்த டாக்டர் ஆனந்தி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தால் அதற்கு காரணம் மகேஷ் தான்.

ஆனால் சமீப காலமாக ஆனந்தியுடன் அன்பு நெருங்கி பழகுவதால் இந்த பழி அவன் மீது விழுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் தான் உருகி உருகி காதலிக்கும் ஆனந்தியின் இந்த நிலைமை அன்புவை பெரிய அளவில் பாதிக்க வைக்கும்.

ஒரு வேலை மித்ராவே மனம் மாறி இதற்கு காரணம் மகேஷ் தான் என்று சொன்னாலும் அதன் பின் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கிறது. சிங்க பெண்ணே சீரியல் பார்க்கும் ரசிகர்களுக்கு அன்பு மற்றும் ஆனந்தி தான் இணைய வேண்டும் என்பது பெரிய எதிர்பார்ப்பு.

அவர்கள் ஒன்று சேர்வதற்காக தான் இவ்வளவு நாள் அந்த நாடகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஆனந்தியின் கர்ப்பம், மகேஷ் அவளை திருமணம் செய்து கொள்வதெல்லாம் ரசிகர்கள் எதிர்பார்க்கவே மாட்டார்கள். இன்றைய ப்ரோமோ இங்க பெண்ணே சீரியல் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக தான் அமைந்திருக்கிறது.

Trending News