ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சிங்கப்பெண்ணில் அம்பலமாக போகும் ஆனந்தியின் கர்ப்பம்.. இதுக்கு அன்பு தான் அழகன்னு தெரியாமலேயே இருந்துருக்கலாம்!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. நேற்றைய எபிசோடில் அன்பு தான் அழகன் என்பதை தன்னுடைய கம்பெனி நண்பர்கள் மற்றும் ஹாஸ்டல் தோழிகளிடம் சொல்ல வேண்டுமென ஆனந்தி ஆசைப்படுகிறாள்.

ஒரு பக்கம் முத்துவுக்கு போன் பண்ணி சௌந்தர்யா மற்றும் ஜெயந்தி ஒரு ரெஸ்டாரன்ட்க்கு வர சொல்கிறாள். அதே மாதிரி ஹாஸ்டல் தோழிகளையும் வரவேற்கிறாள். இதில் காயத்ரி போனதடவை நந்தா விஷயத்தில் ஆன மாதிரி எதுவும் நடந்து விடக்கூடாது என்பதால் மகேஷுக்கு போன் பண்ணி இந்த விஷயத்தை சொல்கிறாள்.

அம்பலமாக போகும் ஆனந்தியின் கர்ப்பம்

மகேஷுக்கு இது பெரிய அளவு கோபத்தை ஏற்படுத்துகிறது. நீங்க முதலாம் அந்த ரெஸ்டாரன்ட் உள்ள போங்க அழகன் வந்ததும் நான் உள்ள வரேன் என்று சொல்லுகிறான். மகேஷ் அந்த ரெஸ்டாரண்டுக்கு போய்க் கொண்டிருக்கும் போது மித்ரா அவனுக்கு போன் பண்ணுகிறாள்.

உங்கள் அம்மா ரொம்ப கெஞ்சி கேட்டதால் தான் நான் இந்த மாதிரி பண்ண என்ன மன்னிச்சிடு மகேஷ் என்று சொல்கிறாள். ஆனால் மகேஷ் அவள் சொல்லும் விளக்கம் எதையுமே கேட்காமல் ஐ ஹேட் யூ மித்ரா என்று சொல்லி போனை கட் பண்ணி விடுகிறான்.

அழகனுக்காக காத்திருக்கும் ஆனந்தியின் தோழிகளுக்கு அன்பு வந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கிறான். மேலும் அன்பு தான் அழகன் என்பதை ஆனந்தி ரொம்பவும் சந்தோஷமாக அவர்களிடம் பகிர்ந்து கொள்கிறாள். அந்த நேரத்தில் ஆனந்தியின் தோழிக்கு மகேஷ் போன் பண்ணுகிறான்.

அப்போதுதான் மகேஷுக்கு போன் பண்ணி சொன்ன விஷயத்தை அவள் எல்லோரிடமும் சொல்கிறாள். உடனே முத்து ஏன் இந்த வேலையை பண்ண, அன்பு தான் அழகன் என்று தெரிந்தால் கண்டிப்பாக மகேஷ் சார் சந்தோசப்பட மாட்டார்.

அவருக்கு கோபம் தான் வரும் ஏனென்றால் மகேஷ் சார் ஆனந்தியை காதலிக்கிறார் என முத்து சொல்கிறான். இது எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறது. அதே நேரத்தில் மகேஷ் ரெஸ்டாரண்டுக்குள் வருவது போல் எபிசோடு முடிந்தது.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மகேஷ் அதிரடியாக அந்த ரெஸ்டாரண்டுக்குள் வருவது போல் காட்டப்பட்டிருக்கிறது. போதாத குறைக்கு குடுகுடுப்புக்காரர் ஆனந்தியின் வீட்டு முன்னாடி வந்து இந்த வீட்டில் ஒரு பெரிய அவமானம் ஏற்பட போகிறது என சொல்கிறார்.

மறுபடியும் ஆனந்தி கர்ப்பமாக இருப்பதாக அடுத்த கண்டெண்ட் இயக்குனர் கொண்டுவரப் போகிறார். கண்டிப்பாக அதற்கு மகேஷ் தான் காரணம் என்பது எல்லோருக்குமே தெரியும். அன்பு மற்றும் ஆனந்தி சேர்ந்திருக்கும் நேரத்தில் மீண்டும் இந்த கர்ப்பமான விஷயத்தை கொண்டு வருவது சீரியலில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்த போகிறது.

Trending News