ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 9, 2025

சிங்கப்பெண்ணில் அன்பு, மகேஷ் வாழ்க்கையை புரட்டி போடும் ஆனந்தியின் கர்ப்பம்.. உண்மையை சொல்வாளா மித்ரா?

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் பரபரப்பான எபிசோடுகளை எதிர்நோக்கி கொண்டிருக்கிறது.

அன்பு மற்றும் ஆனந்தியின் காதலை அன்புவின் அம்மா மனதார ஏற்றுக்கொண்டார்.

அதே நேரத்தில் மகேஷின் அம்மா வார்டனை பார்த்த நேரத்தில் இருந்து மகேஷையும் சேர்த்து வெறுத்து ஒதுக்க ஆரம்பித்து விட்டார்.

எப்படியும் சீரியலில் அடுத்து ஹாஸ்டல் வார்டன் மனோன்மணி யார் என்பதுதான் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

அன்பு, மகேஷ் வாழ்க்கையை புரட்டி போடும் ஆனந்தியின் கர்ப்பம்

ஆனால் அதனோடு சேர்ந்து ஆனந்தியின் கர்ப்பமும் வெளியில் வரப் போகிறது. ஆனந்தி அன்பு காதலிக்கு தடையாக இருப்பது மகேஷ் மட்டும்தான்.

ஆனந்தி தன்னுடைய அப்பாவிடம் பேசினால் அழகப்பன் கண்டிப்பாக இந்த காதலுக்கு ஓகே சொல்லிவிடுவார்.

அன்பு மற்றும் ஆனந்தியின் காதல் பற்றி தெரிந்தது மகேஷும் தன்னுடைய காதலை விட்டுக் கொடுத்து விடுவான்.

இது தான் சீரியலின் கிளைமாக்ஸ் ஆக இருக்கும் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. அதில் தான் மிகப்பெரிய ட்விஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குனர்.

ஆனந்தி கர்ப்பமாக இருப்பது வெளியில் தெரிந்து விடுகிறது. ஒட்டுமொத்த பழியும் அன்பு மீது விழுந்து விடுகிறது.

அன்பு மற்றும் ஆனந்தி இருவருக்கும் இடையே இதனால் பெரிய அளவில் விரிசல் வருகிறது.

ஒரு கட்டத்தில் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது அவளின் கேரக்டரையே அசிங்கப்படுத்தும் அளவுக்கு அமைந்து விடுகிறது.

ஆனந்தி மற்றும் மகேஷுக்கு நடுவே என்ன நடந்தது என்பதை மித்ரா ஒருத்திக்கு தான் தெரியும். மித்ரா வாயை திறந்து மகேஷ் தான் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு காரணம் என சொல்கிறாளா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News