புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிங்க பெண்ணில் அன்புக்காக, மகேஷை எதிர்க்கும் ஆனந்தி.. உச்சகட்ட சந்தோஷத்தில் மித்ரா

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இந்த வாரம் முழுக்க பரபரப்பாக சென்றது. மகேஷ் என்ன சொல்லப் போகிறான் என்பது தற்போது எல்லோருடைய பெரிய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

மித்ராவின் திட்டப்படி ஒரே நேரத்தில் அன்பு மற்றும் ஆனந்தியை கம்பெனியை விட்டு வெளியேற்ற எல்லா சதிவலையும் செய்து முடித்தாகிவிட்டது. அன்பு மற்றும் ஆனந்தியை குடோனில் ஒன்றாக பார்த்த மகேஷ் எந்த வார்த்தையும் பேசாமல் அப்படியே அமைதியாக இருந்து விட்டான்.

உச்சகட்ட சந்தோஷத்தில் மித்ரா

இவர்கள் விஷயத்தில் என்ன நடந்திருக்கும் என்ற விசாரணை இனிதான் கம்பெனியில் நடைபெற இருக்கிறது. நேற்றைய எபிசோடு ஆனந்தி ஹாஸ்டலுக்கு, வார்டனுடன் திரும்புகிறாள். அதே நேரத்தில் மித்ரா தன்னுடைய தோழிகளிடம் நடந்த எல்லாவற்றையும் சொல்லி, அன்பு மற்றும் ஆனந்தியை பற்றி தவறாக ஹாஸ்டல் முழுக்க கதை கட்டி விடுங்கள் என்று சொல்லிவிடுகிறாள்.

அதேபோல விடிந்ததும் மித்ராவின் தோழிகள். தங்களுடைய வேலையை ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனந்தி அவர்கள் பேசுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் அழுது கொண்டே உள்ளே போய்விடுகிறாள். அதே நேரத்தில் ஹாஸ்டல் வார்டன் அந்த இடத்திற்கு வந்து என்ன நடந்தது என்று கேட்கிறார்.

ஆனந்தியின் தோழிகள் மித்ரா மற்றும் அவளுடைய தோழிகள் செய்ததை வார்டனிடம் சொல்கிறார்கள். உடனே வார்டன் ஆனந்தி இப்போது சூழ்நிலை கைதி, அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நீங்கள் அவளைப் பற்றி பேசுவது தவறு என கண்டிக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் ஆனந்தியிடம், உங்கள் மேல் எந்த தவறும் இல்லை என்று நிரூபிப்பது உங்கள் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம், மகேஷ் ஏதாவது திட்டினாள் அவரை எதிர்த்து பேசாதே. அதே நேரத்தில் இப்படி அழுது கொண்டே நிற்காதே, இப்படி நீ அழுதால் கண்டிப்பாக உன் மேல் தவறு இருக்கிறது என எல்லோரும் முடிவு கட்டி விடுவார்கள் என்று சொல்கிறார்.

அன்பு வீட்டில், அவனுடைய அம்மா நீ கம்பெனிக்கு போக வேண்டாம், அந்த மகேஷ் உன்னை ஏதாவது செய்து விடுவான் என்று அழுகிறார். அதற்கு அன்பு எங்கள் மீது வீண்பழி போட்டவர்கள் யார் என கண்டிப்பாக நான் கண்டுபிடிப்பேன் என உறுதியாக சொல்கிறான்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மகேஷ் முன்னிலையில் விசாரணை நடக்கிறது. அப்போதே கருணாகரன் இவர்கள் இருவரும் ஏற்கனவே நெருங்கி பழகுகிறார்கள், குடோனில் தப்பு செய்ததற்காக அன்புவை அடித்து துரத்துங்கள் என்று சொல்கிறார்.

அப்போது அன்பு மேல் எந்த தப்பும் இல்லை அவரை தவறாக பேசாதீர்கள் என மகேஷ் முன்னாடியே ஆனந்தி ரொம்பவும் கோபமாக பேசுவதோடு முடிகிறது. மகேஷின் முடிவு என்ன என்பது தற்போது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Trending News