புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிங்கப்பெண்ணில் அன்பு, மகேஷ் 2 பேரையும் உசுப்பேத்தும் ஆனந்தி.. எல்லாம் எங்க போய் முடிய போகுதோ?

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலில் முக்கோண காதல் பஞ்சாயத்து நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. போதாத குறைக்கு ஆனந்தி, அன்பு மற்றும் மகேஷ் ரெண்டு பேரையும் உசுப்பேத்தி விட்டுக் கொண்டிருக்கிறாள்.

அன்புவின் அப்பா திதிக்கு அவன் வீட்டுக்கு போன ஆனந்தி அன்பு மீது விருப்பம் இருப்பது போல் எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்து அவனுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்து இருக்கிறாள். அங்கிருந்து சைக்கிளில் ஹாஸ்டலுக்கு திரும்பிய ஆனந்தியை வருகிற வழியிலேயே மகேஷ் பார்த்து விட்டான்.

அன்பு, மகேஷ் 2 பேரையும் உசுப்பேத்தும் ஆனந்தி

ஆனந்தியின் சைக்கிள் பஞ்சர் ஆகிவிட்டதால் மகேஷின் பைக்கில் சென்ற ஆனந்தி அவங்க ரோட்டு கடையில் ரெண்டு பேரும் சாப்பிட பிளான் பண்ணினார்கள். மகேஷ் கூட இருக்கும்போதே அன்பு ஆனந்திக்கு போன் செய்தான்.

அன்புவிடம் இதுவரை இல்லாத அளவுக்கு ஆனந்தியை ரொம்பவும் நெருக்கமாக பேசி பழகுகிறாள். அதே நேரத்தில் மகேஷ் உடன் பைக்கில் போவது, ரோட்டு கடையில் சாப்பிடுவது என செய்வதால் மகேஷுக்கும் ஆனந்தி தன்னை காதலிக்கிறாள் என தோன்றுகிறது.

மேலும் ஆனந்தி அன்பு விடம் பேசுவதும் மகேஷுக்கு பிடிக்கவில்லை. இதனால் கண்டிப்பாக அன்பு மற்றும் மகேஷ் இருவருக்கும் இடையே பெரிய பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. என்னதான் கிராமத்தில் வளர்ந்த வெகுளி பெண்ணாக இருந்தாலும் யார் என்ன நோக்கத்துடன் நம்மிடம் பழகுகிறார்கள் என்று கூட ஆனந்திக்கு தெரியாமல் இருப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.

இப்படி இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் உசுப்பேத்தி விடுவதால் கண்டிப்பாக இதனால் பெரிய பிரச்சனை ஏற்பட போகிறது.

சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

Trending News