வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சிங்கப்பெண்ணில் அன்புவை தன் காதலால் கட்டுப்படுத்தும் ஆனந்தி.. வில்லத்தனத்தில் மித்ராவை மிஞ்சிய மகேஷ்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. மித்ரா மற்றும் கருணாகரனை போல் ஒரு விஷப்பாம்பு இருக்கவே முடியாது என்று தான் இவ்வளவு நாள் இருந்தது.

ஆனால் அத்தனை பேரின் வில்லத்தனத்தையும் முறியடித்து விட்டான் மகேஷ். அன்பு தான் அழகன் என்று தெரிய வந்த பின் மகேஷ் எடுத்து வைக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் மகேஷ் மீது வெறுப்பை தான் கொடுக்கிறது.

அன்பு செய்வது உண்மையான காதல் அல்ல, நான் தான் ஆனந்தியை உண்மையாக காதலிக்கிறேன் என பிடிவாதமாக நினைத்துக் கொண்டு அதற்காக அன்பு வை காயப்படுத்திக் கொண்டிருக்கிறான். நேற்றைய எபிசோடில் ஆனந்தி அன்புவுக்கு போன் செய்து மகேஷ் பேசிய எல்லாவற்றையும் சொல்கிறாள்.

வில்லத்தனத்தில் மித்ராவை மிஞ்சிய மகேஷ்

இது அன்புக்கு பேரதிர்ச்சியாக அமைகிறது. உடனே மகேஷின் நம்பருக்கு தொடர்ந்து போன் பண்ணுகிறான். ஆனால் மித்ராவின் பேச்சை கேட்டுக் கொண்டு மகேஷ் அன்புவின் ஃபோனை எடுக்கவில்லை. இதை தொடர்ந்து அன்பு கம்பெனிக்கு மகேசை தேடி வருகிறான்.

ஆனால் மகேஷ் வாட்ச்ம மேனிடம் நான் பிஸியாக இருக்கிறேன் பார்க்க முடியாது என சொல்லி அனுப்ப சொல்கிறான். மகேஷின் இந்த திடீர் மாற்றம் அன்புக்கு அதிர்ச்சியை கொடுக்கிறது. உடனே முத்துவை வரச்சொல்லி அவனுக்கு இதைப் பற்றி ஏதாவது தெரியுமா என கேட்கிறான்.

முத்துவை பொருத்தவரைக்கும் அன்பு தான் அழகன் என்று தெரிந்தால் மகேஷ் அதை ஆனந்தியிடம் சொல்வான் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மகேஷ் இந்த மாற்றம் முத்துவுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இதனால் அன்புவிடம் எதுவும் தெரியாதது போல் காட்டிக் கொள்கிறான். மகேஷை நேரில் பார்த்து என்ன சார் அழகன் யார் என கண்டுபிடிச்சிட்டீங்களா என கேட்கிறான். ஆனால் மகேஷ் கொஞ்சமும் யோசிக்காமல் அன்பு அழகன் இல்லை, அந்த ரெண்டு கையெழுத்தும் ஒத்துப் போகவில்லை என பொய் சொல்கிறான்.

இது முத்துவுக்கே ஷாக்காக இருக்கிறது. இனி மகேசை நம்பினால் பிரயோஜனம் இல்லை என ஆனந்தியிடம் ஒரு திட்டத்தை சொல்கிறான். நீ நேராக அன்புவின் வீட்டிற்கு போய்விடு, நீ வீட்டில் இருக்கும் வரை அன்பு வெளிநாட்டுக்கு கிளம்ப மாட்டான் என ஐடியா கொடுக்கிறான்.

ஆனந்தியும் முத்துவின் ஐடியாவை கேட்டு அரை மணி நேரத்திற்கு முன்னமே கம்பெனியிலிருந்து கிளம்பி விடுகிறாள். ஆனந்தியை புது ஹாஸ்டலில் விடுவதற்கு கிளம்பி வெளியில் வருகிறான் மகேஷ். ஆனந்திக்காக காத்திருக்கும் பொழுது வாட்ச்மேன் ஆனந்தி அரை மணி நேரத்திற்கு முன்னமே கிளம்பி விட்டதாக சொல்கிறார்.

இது மகேஷுக்கு பெரிய கோபத்தை வரவழைக்கிறது. இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மகேஷ் அன்புவுக்கு போன் பண்ணி ஆனந்தி அங்க தான் இருக்கிறாளா என்று கேட்கிறான். அன்பு கொஞ்சம் கூட யோசிக்காமல் ஆமா சார் இங்க தான் இருக்காங்க என்று சொல்லி விடுகிறான். மகேஷ் ஆனந்திக்கு போன் பண்ணி உடனே கிளம்பி வரும்படி சொல்கிறான்.

ஆனால் ஆனந்தி தைரியமாக இல்ல சார் என்னால வர முடியாது என சொல்லி விடுகிறாள். அதே நேரத்தில் அன்பு வின் தங்கை யாழினி, அன்பு உங்களை காதலிப்பது போல் எனக்கு தெரிகிறது. உங்கள் காதலால் மட்டும் தான் அவனை வெளிநாடு போக விடாமல் தடுக்க முடியும்.

அவனிடம் போய் பேசுங்கள் என்று சொல்கிறாள். ஆனந்தியும் அதற்கு சம்மதம் தெரிவிப்பது போல் காட்டப்பட்டு இருக்கிறது. ஒரு வேளை ஆனந்தி அன்புவிடம் தன் காதலை வெளிப்படுத்தினால் அன்பு வெளிநாடு போவதற்கு வாய்ப்பில்லை. அழகன் என்ற கேரக்டரை தாண்டி ஆனந்தி அன்புவை காதலிக்கிறாளா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News