புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நகையை திருடிய கொள்ளையர்கள், நெருப்பு குழியில் சிக்கும் ஆனந்தி.. பரபரப்பான சூழலில் சிங்கப்பெண்ணே

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் இந்த வாரம் முழுக்க பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிறது. அடுத்த வாரம் எபிசோடுகளை மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் வகையில் இந்த வாரம் ஒரு பயங்கர ட்விஸ்ட் இருக்கிறது.

எப்படியும் இன்று ஆனந்தி தீமிதிப்பதோடு எபிசோடு முடிந்து விடும். இனி அடுத்த வாரத்தில் தான் அம்மன் நகை காணாமல் போனது, அதை ஆனந்தியின் வீட்டில் கண்டுபிடிப்பது என எல்லாமே நடக்க இருக்கிறது. நேற்றைய எபிசோடில் தீ மிதிப்பவர்கள் முதலில் சாமியை கும்பிட்டு விட்டு வரும்படி பூசாரி சொல்கிறார்.

பரபரப்பான சூழலில் சிங்கப்பெண்ணே

அங்கே சாமி கும்பிட செல்லும்போது ஏற்கனவே சுயம்புலிங்கம் செட் பண்ணிய பெண் அம்மன் அருள் வந்தது போல் சாமி ஆடுகிறார். தனக்கு குறை இருப்பதாகவும் பானகமும், பட்டும் கொடுக்க வேண்டும் என பூசாரி இடம் சொல்கிறார்.

இதை எல்லாம் ரெடி பண்ணும் வரை தீமிதிப்பது ஒத்தி வைக்கப்படுகிறது என சொல்லிவிட்டு பூசாரி கோயிலுக்கு செல்கிறார். பட்டு மற்றும் பானகம் ரெடி ஆவதற்குள் அண்ணன் வேலுவை சந்தித்து விட்டு வந்துவிடலாம் என ஆனந்தி கிளம்புகிறாள்.

சரியாக ஆனந்தி கோயிலுக்குள் நுழையும் போது வேலுவும் அதே இடத்தில் தான் இருக்கிறான். ஆனால் திடீரென வேலுவின் மனைவி வாணி அவனுக்கு போன் செய்கிறாள். இப்போதே தன்னிடம் போன் பேசியே ஆக வேண்டும் என வேலுவை மிரட்டுகிறாள்.

வாய்ப்பை தவறவிட்ட வேலு

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வேலு போனை எடுத்துக் கொண்டு கோயிலுக்கு வெளியே சென்று விடுகிறான். ஆனந்தி ரொம்ப நேரம் அவளுடைய அண்ணன் வேலுவை தேடிவிட்டு அம்மனிடம் சாமி கும்பிட செல்கிறாள்.

ஆனந்தி சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போதே பூசாரி உள்ளே வருகிறார். ஆனந்தியை பார்த்ததும் நீங்க என்ன பண்ற என கேட்கும் போது ஆனந்தை நான் சாமி கும்பிட தான் வந்தேன் என சொல்லிவிட்டு கோயிலை விட்டு வெளியில் வருகிறாள்.

வெளியில் வரும் பொழுது நகையை திருட கோயிலுக்குள் நுழையும் மலையனை பார்த்து விடுகிறாள். உடம்பு முழுக்க எண்ணெய் பூசி கொண்டிருக்கும் அவனை பார்க்கும் பொழுது ஆனந்திக்கு வித்தியாசமாக தெரிகிறது.

மலையனை நேரில் பார்க்கும் ஆனந்தி

அது மட்டும் இல்லாமல் மலையனின் கையில் சுற்றி இருக்கும் பச்சையை ஆனந்தி ரொம்ப நேரம் கவனிப்பது போல் நேற்றைய எபிசோடு முடிக்கப்பட்டது. இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சுயம்புலிங்கம் திட்டமிட்டபடி கொள்ளையர்கள் அம்மனின் நகையை திருடி விடுகிறார்கள்.

அதே நேரத்தில் ஆனந்தி தீமிதித்து கொண்டிருக்கும் போது கட்டவுட்டை அறுத்து அவள் மீது விழ வைக்க சுயம்புலிங்கத்தின் ஆட்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். எப்படியும் அந்தக் கட்டவுட் ஆனந்தி மீது விழுந்து ஏதாவது அபச குணம் நடந்தால் கண்டிப்பாக ஆனந்தி ஏதோ தவறு செய்திருக்கிறாள் என சொல்வதற்காக சுயம்புலிங்கம் காத்துக் கொண்டிருக்கிறான்.

ஆனந்திக்கு நடக்க போகும் அசம்பாவிதம்

அதே நேரத்தில் தன்னுடைய கழுத்தில் போட்டிருந்த வைரச் செயின் காணவில்லை என்று பொய் சொல்லி மித்ரா ஆனந்தியின் அப்பா அழகப்பனை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள். சுயம்பு லிங்கத்தின் திட்டப்படி அழகப்பன் வீட்டிற்கு போய்விட்டு வருவதை ஒரு பெரிய சாட்சியாக மாற்றப் போகிறார்கள்.

அம்மன் நகையை எடுத்துக் கொண்டுதான் அவர் வீட்டிற்கு போனார் என கண்டிப்பாக சுயம்புலிங்கத்தின் ஆட்கள் சொல்ல வாய்ப்பு இருக்கிறது. எது எப்படியோ நகையை திருட வந்த கொள்ளை கூட்டத்தின் தலைவனை அந்த ஊரின் போலீஸ் இன்ஸ்பெக்டர் பலூன் காரணமாக கோயிலுக்குள் சுற்றும் போது கவனித்திருக்கிறார்.

அதே மாதிரி ஆனந்தியும் உடம்பு முழுக்க எண்ணெயை பூசிக்கொண்டு கோயிலுக்குள் அவன் வரும்போது பார்த்திருக்கிறாள்.

மேலும் அவன உடம்பில் குத்தி இருக்கும் தேள் பச்சை தான் இதற்கு பெரிய சாட்சியாக மாறப்போகிறது என நன்றாகவே தெரிகிறது. இருந்தாலும் அழகப்பனின் குடும்பத்தின் மீது விழப் போகும் பெரிய பழியை அன்பு மற்றும் மகேஷ் எப்படி சேர்ந்து தகர்த்தெறிகிறார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

Trending News