Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் பல நாட்கள் கழித்து ரசிகர்கள் ஹீரோயின் ஆனந்தியை பாராட்டும் அளவுக்கு நேற்றைய எபிசோடு இருந்தது. ஆனந்தி கர்ப்பமாக இருக்கிறாளா, இல்லை பரபரப்புக்காக அந்த ஆனந்தி கர்ப்பமாக இருப்பதாக சொல்வது போல் காட்டப்பட்டு இருக்கிறதா என்று சரியாக தெரியவில்லை.
மருத்துவமனையில் இருந்து வந்த ஆனந்திக்கு இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் இருந்ததோடு, கம்பெனியில் நடந்த பார்ட்டியின் போது நடந்த சில சம்பவங்களும் அவளுக்கு ஞாபகம் வந்தது. காலையில் எழுந்ததும் நான் வேலைக்கு எல்லாம் போக மாட்டேன் ஊருக்கே போக போகிறேன் என தன்னுடைய தோழிகளிடம் ஆனந்தி சொல்கிறாள்.
அவர்கள் எவ்வளவோ சொல்லியும் ஆனந்தி கேட்காமல் நான் ஊருக்கு தான் போகப் போகிறேன் என பிடிவாதமாக இருக்கிறாள். இதனால் ஆனந்தியின் தோழிகள் வார்டனிடம் சென்று ஆனந்தி பற்றி சொல்கிறார்கள்.
ஆனந்தி மனதை மாற்றிய வார்டன்
வார்டன் ஆனந்தியிடம் பேசிய விஷயம் தான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். நீ எதற்காக கிராமத்தில் இருந்து இங்கு வந்தாயோ அதை செய்யாமல் கூட போ, இங்கிருந்து தோல்வியை ஒப்புக் கொண்டு கூட போ அது பிரச்சனை இல்லை.
ஆனால் உன்னை அவமானப் படுத்த வேண்டும் என நினைத்து இப்படி ஒரு வேலையை செய்தவர்களை கண்டுபிடித்து அவர்கள் முகத்திரையை கிழித்து விடு. நீ போன பிறகு உன் கம்பெனியில் இதே போன்ற சம்பவம் நடக்கலாம்.
அப்போது உன் பெயரை சொல்லி பாவப்பட்ட பெண்களை அவர்கள் வாயை மூட வைக்கலாம். உன்னை போல உன் கம்பெனியில் வேலை செய்யும் பெண்களுக்கு இதுபோன்ற அநியாயம் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் நீ அவர்களை கண்டுபிடித்து உண்மையை நிரூபித்து விட்டுப் போ என்கிறார்.
வார்டன் சொன்ன விஷயம் ஆனந்திக்கு பெரிய தைரியத்தை கொடுக்கிறது. அதற்குள் கம்பெனியில் ஆனந்தி வராததால் அன்பு ரொம்பவே மன வருத்தத்தில் இருக்கிறான். அப்போது முத்து, அன்பு விடம் இனியும் தாமதிக்காமல் நீ தான் அழகன் என்று சொல்லிவிடு.
அன்பு தான் அழகன் என்று தெரிந்தால் ஆனந்திக்கு இந்த கம்பெனியில் ஒரு பிடிப்பு கிடைக்கும் என சொல்கிறான். முத்து சொல்வது சரி என தெரிவதால் அன்பு ஆனந்தியை ஹாஸ்டலில் பார்த்து உண்மையை சொல்ல புறப்படுகிறான்.
சிங்க பெண்ணாக மாறிய ஆனந்தி
அதற்குள் ஆனந்தியே கம்பெனிக்கு வந்து விடுகிறாள். அன்பு பேசுவதற்கு முன்பே, ஆனந்தி அன்பு விடம் இந்த பிரச்சனையை உண்டு பண்ணியது யார் என நான் கண்டுபிடிக்க போகிறேன். அதற்கு நீங்கள் என்னோடு துணையாக நிற்க வேண்டும் என சொல்கிறாள்.
அன்புவும் நடந்த விஷயத்தை கண்டுபிடிக்க எல்லா விதத்திலும் நான் உதவி செய்கிறேன் என்று சொல்கிறான். அது மட்டும் இல்லாமல் முத்து, கோமதி, சௌசௌ எல்லோருமே இதற்கு துணையாக நிற்பதாக உறுதி அளிக்கிறார்கள்.
அது மட்டுமில்லாமல் கேட் வாட்ச்மேன் இந்த விஷயத்தில் முக்கிய சாட்சியாக இருப்பதாக முத்து, அன்பு மற்றும் ஆனந்தியிடம் சொல்கிறான். இவர்கள் எல்லோரும் இணைந்து மித்ரா மற்றும் கருணாகரனின் சதித்திட்டத்தை கண்டுபிடிக்கிறார்களா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்
- சிங்க பெண்ணில் கர்ப்பமாக இருக்கும் ஆனந்தி
- சிங்க பெண்ணில் அந்தர்பல்டி அடித்த ஆனந்தி
- சிங்க பெண்ணில் அன்புக்காக, மகேஷை எதிர்க்கும் ஆனந்தி