ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஷாருக்கானால் எகிறிய அட்லியின் மவுசு.. அனந்த் அம்பானி திருமணத்தில் நடந்த அட்ராசிட்டி

Director Atlee: இயக்குனர் அட்லி, பாலிவுட்டிற்கு ஜவான் படத்தின் மூலம் அறிமுகமானார். ஷாருக்கான்நயன்தாரா நடிப்பில் வெளியான அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. இதனால் இவருடைய ரேஞ்ச் பாலிவுட்டில் வேற லெவலில் இருக்கிறது. இந்த நிலையில் வரும் ஜூலை மாதத்தில் முகேஷ் அம்பானியின் இளைய மகனான அனந்த் அம்பானி திருமணம் தான் இப்போது உலக அளவில் பேசும் பொருளாகிவிட்டது.

1000 கோடிக்கு மேல் பணத்தை வாரி இறைத்து, குஜராத் மாநிலத்தில் இருக்கும் ஜாம் நகரில் கடந்த மார்ச் 1ம் தேதியிலிருந்து அனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டம் மூன்று நாட்களாக நீடித்து வருகிறது. அங்கு பாலிவுட் நட்சத்திரங்கள் குவிந்திருக்கின்றனர் .

இயக்குனர் அட்லியும் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் தனது மகன் மீர் முகத்தையும் வெளியே காட்டினார். இப்போது ஜவான் படத்திருக்க பிறகு அடுத்ததாக விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய தெறி படத்தையும் ஹிந்தியில் ரீமேக் செய்கிறார். ஜான் பேபி என பெயரிடப்பட்ட இந்த படத்தை தயாரிப்பது இயக்குனர் அட்லி தான்.

Also Read: அம்பானி வீட்டில் அட்லி குடும்பம்.. குழந்தையுடன் வைரலாகும் புகைப்படம்

அட்லியை சாய்த்த பாம்பே ஹீரோஸ்

இந்த படத்தில் வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடிக்கின்றனர். இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் அட்லியின் மதிப்பு  ஹிந்தி நடிகர்களின் மத்தியில் அதிகமாகிவிட்டது. இந்த நிலையில் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியான வீடியோ ஒன்றில் நடிகர் ரன்வீர் சிங் அட்லியை பார்த்து, ‘பாம்பே  ஹீரோஸ் எல்லோரும் அட்லியை பிடிக்க தான் காத்திருக்கின்றனர்’ என பந்தை கேச் பிடிப்பது போல் ஆக்ஷன் காட்டுகிறார்.

 ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டத்தில் அட்லியுடன் பாம்பே ஹீரோஸ் செய்த அட்ராசிட்டி அடங்கிய  வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது. ‘அவ்வளவுதான் இனி அட்லி கோலிவுட் பக்கம் வந்த மாதிரி தான்!’ அந்த அளவிற்கு அவர் மீது பாம்பே ஹீரோஸ் பைத்தியமாக இருக்கின்றனர்.

Also Read: அடுத்தடுத்து ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் 5 படங்கள்.. விஜய் அஜித் பிஸியாக இருப்பதால் ஜெட் வேகத்தில் பறக்கும் தலைவர்

Trending News