புதன்கிழமை, ஜனவரி 8, 2025

11 வருடம் கழித்து ரீமேக் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி தரும் அருண்பாண்டியன்.. வைரலாகும் அன்பிற்கினியாள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கவனிக்கப்படும் ஹீரோ மற்றும் இயக்குனராக வலம் வந்த அருண்பாண்டியன் கடந்த சில வருடங்களாக நடிப்பதில் இருந்து விலகிக்கொண்டு படங்களை விநியோகம் செய்யும் வேலையை செய்து வந்தார்.

இந்நிலையில் தற்போது அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து அவரது உறவினர் மகள் ரம்யா பாண்டியன் என்பவரும் கவனிக்கப்படும் நாயகியாக உருவெடுத்துள்ளார்.

இந்நிலையில் மலையாளத்தில் 2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஹெலன் என்ற படத்தின் தமிழ் ரீமேக் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அருண்பாண்டியன்.

அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் எதிர்பார்த்த அளவுக்கு தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வலம் வர முடியவில்லை. அவர் நடித்த படமும் படுதோல்வியை சந்தித்தது. இதனால் எப்படியாவது தன்னுடைய மகளை முன்னணி நாயகியாக உயர்த்திவிட வேண்டும் என இந்த முடிவை எடுத்துள்ளார் அருண்பாண்டியன்.

Anbirkiniyal-firstlook
Anbirkiniyal-firstlook

மலையாளத்தில் வெளியான ஹெலன் திரைப்படம் தந்தை மற்றும் மகள் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம். தற்போது அதே படத்தை தமிழுக்கு ஏற்றவாறு சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து அன்பிற்கினியாள் என்ற பெயரில் உருவாக்கியுள்ளனர்.

Anbirkiniyal-firstlook-01
Anbirkiniyal-firstlook-01

அன்பிற்கினியாள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி உள்ளன. இந்த படத்தின் மூலம் அருண்பாண்டியன் மீண்டும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருவார் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

Trending News