சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சிங்கப்பெண்ணில் ஆனந்தி செத்தாலும் பரவாயில்லை என்று முடிவெடுத்த அன்புவின் அம்மா.. நேரம் பார்த்து கொளுத்தி போட்ட மித்ரா!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தியும் அன்பும் காதலில் ஒன்று சேர்ந்து விட்டார்கள், மீண்டும் கம்பெனிக்கு வேலைக்கு வந்து விட்டார்கள் என்று இப்போதுதான் ரசிகர்கள் நிம்மதி பெரும் மூச்சு விட்டார்கள்.

ஆனால் அதற்குள் அவர்களுக்கு பிரச்சனைக்கு மேல் பிரச்சனை ஆரம்பித்து விட்டது. ஒரு பக்கம் ஆனந்தியின் வீட்டில் குடுகுடுப்பைகாரன் சொல்லிய செய்தி அவளுடைய அப்பாவை நிலை கொள்ள முடியாமல் செய்து விட்டது. தொடர்ந்து ஜோசியரும் 48 நாளுக்குள் வீட்டில் நல்ல காரியம் நடக்க வேண்டும், இல்லை என்றால் ஏதாவது பெரிய அவமானம் ஏற்பட்டு விடும் என்று சொல்லிவிட்டார்.

இதனால் பரிகாரம் செய்வதற்காக ஆனந்தியின் அப்பா அவளை தேடி சென்னைக்கு வருகிறார். ஆனந்தி அன்பு வீட்டில் இருப்பது தெரியாததால் நேரடியாக ஹாஸ்டலுக்கு போகிறார். அங்கு ரெஜினா மற்றும் காயத்ரியை பார்த்துவிட்டு ஆனந்தி எங்கே எனக் கேட்பது போல் காட்டப்பட்டு இருக்கிறது.

ஆனந்தி செத்தாலும் பரவாயில்லை என்று முடிவெடுத்த அன்புவின் அம்மா

அதே நேரத்தில் அங்கே வந்த மித்ரா வார்டனிடம் அவர்கிட்ட சொல்லுங்க ஆனந்தி ஏன் நீங்க ஹாஸ்டல்ல விட்டு வெளியே அனுப்பிட்டிங்க என்று என்கிறாள். போதாத குறைக்கு மகேஷின் அம்மா அன்புவின் அம்மாவை பார்த்து ஆனந்தி அவங்க வீட்டில் தங்கி இருப்பதை பற்றி போட்டுக் கொடுத்து விடுகிறார்.

உடனே அன்பின் அம்மாவுக்கு ரொம்ப கோபம் வந்து விடுகிறது. நேரடியாக வீட்டுக்கு வருகிறார். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தியின் துணிப்பையை அன்புவின் ரூமில் கண்டுபிடிப்பது போல் காட்டப்பட்டு இருக்கிறது. அன்புவின் அம்மா தன்னை தேடுவதை தெரிந்து ஆனந்தி மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் டேங்கில் ஒளிந்து கொள்கிறாள்.

உடனே அன்பின் அம்மா யாழினி இடம் அந்த தண்ணி டேங்கில் ஒளிந்து இருக்கிறாரா என்று பாரு என்று சொல்கிறார். யாழினியும் தண்ணி டேங்கை தொறந்து ஆனந்தி உள்ளே இருப்பதை பார்க்கிறாள். அம்மாவுக்காக பயந்து இல்லை அவங்க இங்க இல்லை என்று சொல்கிறாள்.

அதையும் நம்பாமல் அன்புவின் அம்மா மோட்டார் போட்டுவிட்டு அந்த தண்ணி டேங்க்கை மூடு என்று சொல்கிறார். அம்மாவுக்கு பயந்து யாழினியும் அதை செய்கிறாள். ஒரு பக்கம் ஆனந்தியின் அப்பா ஹாஸ்டல் வாசலில், இன்னொரு பக்கம் ஆனந்தி தண்ணீர் டேங்கில் என இருக்கும்போது அன்பு விரைந்து வீட்டிற்கு வருவது போல் காட்டப்பட்டு இருக்கிறது.

அன்பு தன்னுடைய அம்மாவுக்கு தெரியாமல் ஆனந்தியை காப்பாற்றி ஹாஸ்டலுக்கு கூட்டிட்டு போகிறானா, இல்லை அவனுடைய அம்மா இந்த விஷயத்தை தெரிந்து கொண்டு மீண்டும் ஆனந்தியை காயப்படுத்தப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News