புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிங்கப் பெண்ணில் மகேஷ் சொல்ல போகும் அந்த ஒரு வார்த்தை.. பழியிலிருந்து மீள்வார்களா அன்பு, ஆனந்தி?

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அடக்கடவுளே! இது என்ன அன்புக்கு வந்த சோதனை என்று எல்லோரும் தலையில் கை வைத்துக் கொள்ளும் அளவுக்கு அன்புவின் நிலைமை மோசமாக இருக்கிறது.

குடோனுக்குள் மாட்டிக் கொண்ட அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் ஒரே இடத்தில் படுத்து தூங்குவதை மகேஷ் நேருக்கு நேராக பார்க்கிறான். ஆனந்தியின் தாவணியில் தீ பற்றியதால் அன்புவின் சட்டையை போட்டுக் கொண்டு அவள் தூங்குகிறாள்.

அன்பும் பனியன் உடன் தூங்குவதால் இதை பெரிய அளவில் தவறாக சித்தரித்து விடுகிறான் கருணாகரன். அது மட்டும் இல்லாமல் நீ அசிங்கம் பண்ண இந்த இடம்தான் கிடைத்ததா என மகேஷுக்கு தூபம் போடும் அளவுக்கு பேசுகிறான்.

இன்னொரு பக்கம் மித்ரா பிள்ளையையும் கிள்ளி விட்டுவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவது போல் நேக்காக பேசினாள். ஆளுக்கு ஒரு பக்கம் ஆனந்தி மற்றும் அன்பு விடம் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார்கள். ஆனால் மகேஷ் மட்டும் வாயை திறக்காமல் சிலை போல் நின்றான்.

அது மட்டும் இல்லாமல் கேள்வி கேட்டவர்களையும் சத்தம் போட்டு அமைதியாக இருக்க சொன்னான். அத்தோடு ஆனந்தியை வார்டன் அழைத்துக் கொண்டு ஹாஸ்டலுக்கு சென்று விடுகிறார். மகேஷும் தன்னுடைய வீட்டுக்கு போய் விடுகிறான்.

இதனால் இன்று அவர்கள் கம்பெனி வரும்பொழுது தான் இதற்கான விசாரணை நடைபெறும் என தெரிகிறது. ஆனால் ஆனந்தி காலையில் ஹாஸ்டலில் இருந்து கிளம்பும்போதே மித்ராவின் தோழிகள் அவளை வம்புக்கு இழுக்கிறார்கள்.

அன்புவை வைத்து தப்பா பேசுவதோடு, இரட்டை அர்த்த வசனங்களால் அவளை நோகடிக்கிறார்கள். ஹாஸ்டல் வார்டன் கூட நீங்கள் இருவரும் உங்கள் மீது தப்பு இல்லை என நிரூபிப்பதில் தான் உங்களுடைய வாழ்க்கை இருக்கிறது என்று சொல்லி முடித்து விடுகிறார்.

அதே நேரத்தில் அன்புவின் அம்மா அந்த மகேஷ் உன்னை ஏதாவது செஞ்சு விடுவானோ என எனக்கு பயமாக இருக்கிறது என்று சொல்கிறார். அதற்கு அன்பு மகேஷ் சார் என் மீது ஏதாவது தப்பான பார்வையை வைத்திருந்தால், கண்டிப்பாக நான் இன்னைக்கு கம்பெனியை விட்டு வெளியில் வந்து விடுவேன் என்று சொல்கிறான்.

மகேஷ் என்ன முடிவெடுக்கப் போகிறான் என்பது எப்படி அடுத்த வாரம் தான் தெரியும். மகேஷ் முதலில் குடோனுக்குள் வந்து அன்பு மற்றும் ஆனந்தியை பார்க்கும் பொழுது அந்த குடோனின் கதவு பூட்டப் படாமல் இருந்தது.

ஒரு வேளை அன்பு மற்றும் ஆனந்தி மீது அவனுக்கு நம்பிக்கை இருந்தால், இவர்கள் இருவரும் எந்த தப்பான நோக்கத்துடனும் உள்ளே இருந்திருந்தால் கண்டிப்பாக கதவை பூட்டி வைத்திருப்பார்கள், என யோசிக்க வாய்ப்பு இருக்கிறது.

இன்னொரு பக்கம் கம்பெனியில் கண்டிப்பாக சிசிடிவி கேமரா எல்லா இடத்திலும் வைத்திருக்கிறார்கள். அதிலும் குடோனில் அந்த கேமரா இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

மகேஷ் அப்படியும் செக் பண்ண வாய்ப்பு இருக்கிறது, இல்லை என்றால் விசாரணையில் அன்பு கூட சிசிடிவி கேமராவை செக் பண்ணுங்கள் என்று சொல்லலாம். எது எப்படியோ இந்த பரபரப்பான திருப்பத்துடன் இந்த வார முடிவடைகிறது. இதனால் அடுத்த வாரத்தில் என்ன நடக்கும் என்ற பெரிய எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரிக்கும்.

Trending News