வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சிங்கப்பெண்ணில் நேரம் பாத்து காத்திருந்த மித்ரா.. வான்டடாக சிக்கிய அன்பு, ஆனந்தி

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஒரு வழியாக அன்பு தான் அழகன் என்பதை கண்டுபிடித்த ஆனந்தி இப்போது ஹாஸ்டலுக்கும் சென்று விட்டாள்.

அதே நேரத்தில் வீட்டை விட்டு கோபமாக வெளியேறிய அன்பு வை மீண்டும் மகேஷ் அவனுடைய அம்மாவிடம் பேசி வீட்டில் சேர்த்து விட்டான்.

இதற்கு இடையில் அன்புவின் அம்மா அவனுக்கு துளசியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஆசையை மகேஷிடம் சொல்ல, மகேஷ் இப்போதைக்கு பிரச்சனை தீர்ந்தால் போதும் என்று சொல்லி அன்பு கண்டிப்பாக துளசியை கல்யாணம் செய்து கொள்வான் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு வந்து விட்டான்.

நேரம் பாத்து காத்திருந்த மித்ரா

இது அன்பு மற்றும் ஆனந்தி இருவருக்குமே ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னொரு பக்கம் ஆனந்தியின் அக்காவுக்கு மாப்பிள்ளை முடிவாகி, திருமணமும் நடைபெற இருக்கிறது.

மாப்பிள்ளை கொஞ்சம் வசதியான இடம் என்பதால் நகை அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் என்று ஆனந்தியின் அப்பா அவளிடம் சொல்கிறார்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கம்பெனிக்கு ஒரு மிகப்பெரிய ஆர்டர் வந்திருக்கிறது. இதன் மூலம் கடந்த மாதத்தில் ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து மூன்று மடங்கு லாபத்தை பார்த்து விடலாம் என மகேஷ் சொல்கிறான்.

கருணாகரன் மற்றும் அரவிந்த் இந்த ஆர்டர் நமக்கு ஒத்து வராது, விட்டு விடலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் அன்பு நம்மால் இதை செய்து முடிக்க முடியும் நான் செய்கிறேன் என மகேஷுக்கு உறுதுணையாக நிற்கிறான்.

உடனே மகேஷும் அன்பு வை முழுக்க முழுக்க நம்பி இந்த வேலையை கொடுக்கிறேன், கருணாகரன் நீங்க எதுக்கு உதவி செஞ்சா போதும் என சொல்கிறான்.

கிட்டத்தட்ட 2000 பீஸ் துணிகளை மூன்று நாட்களுக்குள் தைத்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்த ஆர்டர்.

ஒரு பக்கம் மகேஷ் இதை ஒத்துக் கொள்ள இன்னொரு பக்கம் அது மித்ரா மற்றும் கருணாகரனுக்கு பெரிய கோபத்தை ஏற்படுத்துகிறது.

இதுவரை கம்பெனியில் ஆனந்தி ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து கொண்டு இருந்தாள். இந்த ஆர்டர் கிடைத்ததும் அன்பு ஆனந்தியையும் ஒரு மிஷினில் உட்கார வைத்து தைக்க சொல்கிறான்.

இது கருணாகரனுக்கு பெரிய கோபத்தை ஏற்படுத்த அவளுக்கு எதுவும் தெரியாது அவளை வச்சு என்ன பண்ண போறீங்க என்று கேட்கிறார்.

இதனால் கோபம் அடைந்த ஆனந்தி எனக்கு ஏன் எதுவும் தெரியாது என்று கேட்டுவிட்டு, டீ சர்ட்டுகளின் சைஸுக்கு ஏற்ப அளவுகளை கரெக்டா சொல்லி முடிக்கிறாள்.

மேலும் இந்த வேலையை நான் சரியாக முடித்துக் காட்டுகிறேன் என கருணாகரனுக்கு சவால் விடுகிறாள்.

இனிவரும் அடுத்த ரெண்டு வாரங்களுக்கு இந்த ஆர்டரை எப்படி இவர்கள் முடிக்கிறார்கள், மித்ரா மற்றும் கருணாகரன் எந்த அளவுக்கு இடையூறு செய்யப் போகிறார்கள் என்பது தான் காட்டப்படும்.

மித்ரா ஏற்கனவே அன்பு மற்றும் ஆனந்தி எதிலாவது சிக்குவார்களா என பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது அவளுக்கு அல்வா போல் இந்த பிரச்சனை கையில் கிடைத்திருக்கிறது.

Trending News