Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியனின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஆனந்திக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அன்பு அந்த இடத்தில் கண்டிப்பாக வந்து நிற்பான். ஆனால் இந்த முறை அன்பு மற்றும் ஆனந்தி இருவருக்குமே ஒரே நேரத்தில் பிரச்சனை கிளம்பி இருக்கிறது.
ஒரு பக்கம் ஆனந்தி தன்னுடைய வீட்டில் இருப்பதை மகேஷின் அம்மா மூலம் அன்புவின் அம்மா அறிந்து கொண்டார். அது எப்படி ஒரு வயசு பொண்ணு இவ்வளவு நாள் அன்பு என்றும் தங்க முடியும் என அவருக்கு ரொம்ப கோபம் வந்து விடுகிறது.
வீட்டுக்கு வந்து செக் பண்ணும் போது சரியாக ஆனந்தியின் பையும் அன்புவின் அம்மா கையில் மாட்டிக் கொள்கிறது. அதே நேரத்தில் சென்னையில் உள்ள கோயிலில் பரிகார பூஜை பண்ண வரும் ஆனந்தியின் அப்பா அவளை தேடி ஹாஸ்டலுக்கு வந்து விடுகிறார்.
அன்பு, ஆனந்திக்கு ஏற்பட போகும் அவமானம்
ஆனந்தி வேலைக்கு போய் இருப்பதாக காயத்ரி மற்றும் ரெஜினா சொல்ல அந்த இடத்திற்கு வந்த மித்ரா மொத்த உண்மையையும் போட்டு உடைத்து விடுகிறாள். அது மட்டும் இல்லாமல் வார்டனிடம் மேம் நீங்க ஆனந்தியை ஹாஸ்டலை விட்டு வெளியே அனுப்பியதை அவங்க அப்பா கிட்ட சொல்லுங்க என சொல்கிறாள்.
அன்புவின் வீட்டில் ஆனந்தி மொட்டை மாடியில் தண்ணீர் டேங்கில் ஒளிந்து கொண்டிருக்கிறாள். கோபம் பொறுக்காத அன்புவின் அம்மா முதலில் யாழினி இடம் அவள் அந்த டேங்கில் இருக்கிறாளா பாரு என சொல்கிறார்.
ஆனந்தி உள்ளே இருப்பதை பார்த்தோம் அவளை காப்பாற்ற இல்லை என யாழினி பொய் சொல்லுகிறாள். உடனே மோட்டாரை போட்டுவிட்டு டேங்க்கை மூடி வீடு என்கிறார். பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் யாழினியும் அம்மா சொன்னதை செய்து முடிக்கிறாள்.
இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மித்ராவின் பேச்சை கேட்டு கோபம் வந்த காயத்ரி ஆனந்தி மீது எந்த தப்பும் இல்லை என சொல்கிறாள். இன்றைய எபிசோடில் கண்டிப்பாக தனக்கு ஏற்பட்ட பிரச்சனையை தீர்ப்பதற்காக தான் ஆனந்தி ஹாஸ்டலில் விட்டு வெளியேறினாள் என்றும், அதனால் தான் லேட்டாக வந்தால் என்றும் காயத்ரி உண்மையை சொல்லப் போகிறாள்.
ஆனந்தி தண்ணீர் டேங்க்கிற்குள் சிக்கிக் கொண்டதை யாழினி அன்பு விடம் சொல்ல அன்பு பதறி அடித்துக் கொண்டு மொட்டை மாடிக்கு ஓடி வருகிறான். ஆனந்தி எப்படியும் வெளியில் வந்து தான் ஆக வேண்டும் என்று அவனுடைய அம்மா மாடியில் நிற்கிறார்.
கண்டிப்பாக ஆனந்தியை காப்பாற்றுவதோடு அவனுடைய அம்மாவிடமும் நடந்து உண்மையை சொல்லப் போகிறான். இதற்கு அடுத்து அன்புவின் அம்மா இவர்கள் இரண்டு பேரையும் எந்த அளவுக்கு அவமானப்படுத்தப் போகிறார் என்பது இனி தான் தெரியும்.