புதன்கிழமை, ஜனவரி 15, 2025

குடோனுக்குள் மாட்டிக்கொண்ட அன்பு ஆனந்தி, மகேஷுக்கு போன் போட்ட வார்டன்.. எதிர்பாராத திருப்பங்களுடன் சிங்கப்பெண்ணே

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலில் இந்த வாரம் எதிர்பாராத திருப்பம் நடந்திருக்கிறது. எப்போதுமே தன்னுடைய திட்டத்தில் தோற்றுப் போகும் மித்ரா இந்த முறை அரவிந்தின் உதவியோடு ஜெயித்திருக்கிறாள்.

அரவிந்த், மித்ரா, கருணாகரன் மூவரும் பின்னிய சதி வலையில் ஆனந்தி மற்றும் அன்பு சிக்கி கொள்கிறார்கள். ஸ்டாக் எடுக்க போன அன்பு மற்றும் ஆனந்தி குடோனுக்குள் இருக்கும் போது அரவிந்த் இருவரையும் உள்ளே வைத்து பூட்டு போட்டு விடுகிறான்.

மேலும் அட்டெண்டன்ஸ் ரெக்கார்டில் அன்பு மற்றும் ஆனந்தி இருவருக்கும் பதிலாக மித்ரா கையெழுத்து போட்டு விடுகிறாள். ஆபீஸ் ரெக்கார்டு படி இருவரும் கம்பெனியை விட்டு வெளியேறி விட்டதாக காட்டப்படுகிறது.

எதிர்பாராத திருப்பங்களுடன் சிங்கப்பெண்ணே

அதே நேரத்தில் இரவு லேட் ஆகியும் ஆனந்தி ஹாஸ்டலுக்கு வராததால் அவளுடைய தோழிகள் வார்டனிடம் சொல்கிறார்கள். ஆனந்திக்கு என்ன ஆனதோ என்று தெரியாமல் வார்டன் மகேஷுக்கு போன் செய்கிறார்.

கம்பெனி ரெக்கார்டு படி இருவரும் வெளியே போனது போல் காட்டப்பட்டதால், அன்பு மற்றும் ஆனந்தி வேறு எங்காவது சென்றிருப்பார்கள் என எல்லோருக்குமே சந்தேகம் வர வாய்ப்பு இருக்கிறது.

அதிலும் மகேஷ் ஏற்கனவே அன்பு, ஆனந்தி இருவரும் நெருங்கி பழகுவதால் உச்சகட்ட கோபத்தில் இருக்கிறான். இதில் இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டால் கண்டிப்பாக அன்பு கம்பெனியை விட்டு வெளியேறவே வாய்ப்பு இருக்கிறது.

Trending News