ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சிங்கப்பெண்ணில் காதலுக்காக வீட்டை விட்டு வெளியேறும் மகேஷ்.. குற்றவாளிகளாய் அன்பு, ஆனந்தி

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது . இவ்வளவு நாள் அன்பு, ஆனந்தி மேல் எந்த தப்பும் இல்லை என்றாலும், இப்போது காதலை மகேஷிடம் மறைத்து பெரிய தவறை செய்து கொண்டிருக்கிறார்கள்.

நேற்றைய எபிசோடில் அன்பு மற்றும் ஆனந்தி இருவருமே கோவிலில் இருந்து வீடு திரும்புகிறார்கள். அன்புவை பார்த்து அவனுடைய அம்மா ரொம்பவே சந்தோஷப்படுகிறார். அன்பு வெளிநாட்டுக்கு போகும் முடிவை மாற்றி கொண்டதால் அவனுடைய பெயரில் அர்ச்சனை செய்ய கோவிலுக்கு போகிறார்.

குற்றவாளிகளாய் அன்பு, ஆனந்தி

அந்த கேப்பில் யாழினி அன்பு மற்றும் ஆனந்தியை ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் வரவேற்கிறாள். அது மட்டுமில்லாமல் அந்த செயினை ஆனந்தியின் பைக்குள் வைத்தது நான் தான் என்ற உண்மையையும் சொல்கிறாள்.

ரூமுக்கு வந்த அன்பு மற்றும் ஆனந்தி முத்துக்கு போன் பண்ணுகிறார்கள். அன்பு தான் அழகன் என்று தனக்கு தெரிந்த விஷயத்தை சொல்கிறாள். உடனே முத்து அன்பு மற்றும் ஆனந்தி இருவரிடமும் ட்ரீட் கேட்கிறான். ஜெயந்தி மற்றும் சௌந்தர்யாவிடம் ஏதும் சொல்லாமல் ஹோட்டலுக்கு கூட்டிட்டு வர சொல்கிறார்கள்.

அதே மாதிரி ஆனந்தி தன்னுடைய ஹாஸ்டல் தோழிகளுக்கு போன் பண்ணி சர்ப்ரைஸாக ஹோட்டலுக்கு வர சொல்கிறார்கள் . தங்களுடைய காதலை அன்பு மற்றும் ஆனந்தி இப்படி கொண்டாடி கொண்டிருக்கும் நேரத்தில் மகேஷ் அவனுடைய அம்மாவிடம் ருத்ர தாண்டவம் ஆடி கொண்டிருக்கிறான்.

அன்பு மற்றும் ஆனந்தியை எப்படி தப்பா பேசுவீங்க, ஆனந்தியை நான் காதலிக்கிறேன் என்று சொல்கிறான். மேலும் ஆனந்தியை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் வீட்டை விட்டு வெளியேறிடுவேன் என்று கோபமாக சொல்லி விட்டு போகிறான். அன்பு மற்றும் ஆனந்தி இன்னும் உண்மையை மறைத்து கொண்டிருந்தால் அதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட போவது மகேஷ் தான்.

Trending News