திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

சிங்கப்பெண்ணில் நேருக்கு நேர் மோதும் அன்பு – மகேஷ்.. காதல் தோல்வியால் மிருகமான MD சார்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

ஆனந்தி மகேஷிடம் தான் அன்புவை காதலிப்பதை பற்றி சொல்லிவிடுவாள் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆனந்தி அன்புக்கு மட்டும் இல்லை சீரியலை பார்த்த மொத்த பேருக்கும் அல்வா கொடுத்து விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.

மகேஷ் ரொம்பவும் ஆசையுடன் ஆனந்தி இடம் நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னான்.

ஆனால் ஆனந்தி நீங்க எனக்கு தெய்வம் மாதிரி உங்களுக்கு மனைவியாகனும் என்று நான் எதிர்பார்த்தது கிடையாது என்று சொல்கிறாள்.

காதல் தோல்வியால் மிருகமான MD சார்

அது மட்டும் இல்லாமல் உயிரை கேட்டால் கூட நான் உங்களுக்காக கொடுப்பேன், ஆனால் தயவு செய்து காதலை கேட்காதீர்கள் என்று சொல்லி விடுகிறாள்.

இது மகேஷுக்கு பெரிய அளவு கோபத்தை கொடுக்கிறது. பிறந்தநாள் பார்ட்டி ஆரம்பிப்பதற்கு முன்னமே மகேஷ் அந்த இடத்திலிருந்து வேகமாக கிளம்பி விடுகிறான்.

மறுநாள் விடிந்தும் மகேஷ் இன்னும் வீடு திரும்பாததால் அவனுடைய அப்பா அம்மா ரொம்ப சோகத்தில் இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் அன்பும் தன்னுடைய பங்குக்கு மகேஷ் எங்கே இருக்கிறான் என்று தேடிக் கொண்டிருக்கிறான்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மகேஷ் அதிக அளவு குடித்துவிட்டு ஆனந்தியின் ஹாஸ்டலுக்கு போகிறான்.

அங்கே நின்று கொண்டு பயங்கரமாக கலாட்டா செய்கிறான். ஆனந்தியின் தோழி ரெஜினா என்ன செய்வது என்று தெரியாமல் அன்புவுக்கு போன் செய்து விடுகிறாள்.

உடனே அன்பு ஆனந்தியின் ஹாஸ்டலுக்கு வேகமாக வருகிறான். ரெஜினா ஆனந்தியிடம் அன்பு வந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லவும் ஆனந்தி ஏன் அவருக்கு போன் பண்ணுன என்று கேட்கிறாள்.

உடனே மகேஷ் அந்த அன்பு வரட்டும் அவனைத்தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என ரொம்ப கோபமாக சொல்கிறான்.

மகேஷ் அன்புடன் சண்டையிட்டு மோத இருப்பது போல் புரோமோ காட்டப்பட்டிருக்கிறது.

ஒரு வேளை தன்னுடைய காதலுக்கு உதவாததால் அன்பு வந்ததும் அதைப் பற்றி ஆதங்கத்துடன் மகேஷ் பேசுவதற்கு தான் அதிக வாய்ப்பு இருக்கிறது.

Trending News