வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கடைசி ஆயுதத்தை கையில் எடுத்த அன்பு.. அழகனுக்கும், நந்தாவுக்கும் நடுவில் சிக்கி கொண்ட ஆனந்தி

Singapenne: சன் டிவியின் சிங்க பெண்ணே சீரியலில் அழகன் யார் என்று ஆனந்தி தெரிந்து கொள்ளும் தருணத்திற்காகத்தான் நேயர்கள் காத்து கிடக்கிறார்கள். அன்பும் நான் தான் அழகன் என்று ஒவ்வொரு முறையும் ஆனந்தியிடம் சொல்ல நினைத்து, பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் தயங்கிக் கொண்டே இருந்தான்.

இந்த தயக்கத்தை மித்ரா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறாள். மகேஷ் ஆனந்தியை விட்டு விலகுவதற்கு இந்த அழகன் கேரக்டர் ரொம்ப உதவும் என்பதுதான் மித்ராவின் திட்டம். மித்ராவின் கைக்கூலியான நந்தாவும் இதற்கு பெரிய அளவில் துணை போய்க் கொண்டிருக்கிறான்.

மித்ரா நடிக்க தான் சொன்னாள் ஆனால் நந்தாவுக்கு நிஜமாகவே ஆனந்தியின் மீது ஈடுபாடு ஏற்பட்டு விட்டது. இதுவரை முக்கோண காதலாக இருந்த இந்த கதை நான்கு முனை காதலாக மாறிவிட்டது. அழகன் என்ற கேரக்டரில் இன்னொருவர் ஆனந்தியை தப்பாக வழிநடத்த காத்திருப்பதை உணர்ந்த அன்பு இனி உண்மையை சொல்ல தயங்க கூடாது என முடிவெடுத்து இருக்கிறான்.

கடைசி ஆயுதத்தை கையில் எடுத்த அன்பு

நேற்றைய எபிசோடில் ஆனந்தி இடம் நான்தான் அழகன் கிடையாது என்று சொல்ல எவ்வளவோ அன்பு முயற்சி செய்தான். ஆனால் ஆனந்தி அதை எதையுமே காது கொடுத்து கேட்பதாய் இல்லை. ஆனந்தியிடம் நந்தா அழகன் இல்லை என்று சொல்ல வேண்டும், அப்படி அதை ஆனந்தி நம்பவில்லை என்றால் நான் தான் அழகன் என்றே நிரூபித்து விட வேண்டும் என்று அன்பு உறுதியாக முடிவெடுத்து விட்டான்.

கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த ஆனந்தியிடம் அவளுடைய தோழியை அனுப்பி காபி கடைக்கு வர சொல்கிறான் அன்பு. இதை ஒட்டு கேட்ட நந்தா உன்னுடைய திட்டத்தை கண்டிப்பாக தவிடு பொடியாகக்குவேன் என சிரித்துக் கொண்டே மனதிற்குள் சொல்லிக் கொள்கிறான்.

அதே நேரத்தில் காபி கடையில் ஆனந்திக்காக அன்பு காத்திருக்கிறான். இன்று அன்பு நான்தான் அழகன் என்று ஆனந்தியிடம் தெரியப்படுத்துவானா, ஆனந்தி அதை ஏற்றுக் கொள்வாளா என்பது பெரிய ட்விஸ்ட் ஆக இருக்கிறது.

Trending News