Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலில் நேற்றைய எபிசோடு யாருமே எதிர்பார்க்காத ஒன்றுதான். நந்தா கேரக்டரை இவ்வளவு சீக்கிரம் முடித்து விடுவார்கள் என்று யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.
நந்தா ஏடாகூடமாக அன்பு வை இந்த பிரச்சனையில் இழுத்துவிடுவான் என்று தான் கணிக்கப்பட்டிருந்தது. ஒரு வேலை நந்தாவின் வாக்குமூலம் மித்ராவுக்கு எதிரானதாக இருந்தாலும் நன்றாக இருக்கும் என்றுதான் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கிடந்தார்கள்.
அதற்கு ஏற்ற மாதிரி நந்தா என்னுடைய வாக்கு மூலத்தை நான் மாஜிஸ்திரேட் முன்னிலையில் தான் சொல்வேன் என சொன்னான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நந்தா இறந்துவிட்டது மட்டுமில்லாமல் ஆனந்தி தான் அவனை கொன்று இருப்பாள் என போலீஸ் கைது செய்திருக்கிறது.
கொலையாளியை கண்டு பிடித்த அன்பு
அதுவும் கைது செய்யப்பட்ட நந்தாவின் காதலி என பத்திரிக்கையில் செய்தி வெளியிடப் போவதாக கூட போலீஸ் சொல்வது போல் காட்டப்பட்டிருந்தது. எப்படி பார்த்தாலும் ஆனந்தி சிக்கினால் போதும் என மித்ரா தன் பக்கத்திலிருந்து எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தாள்.
இன்றைய ப்ரோமோவில் அன்பு கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்தது போல் காட்டப்பட்டிருக்கிறது. அன்பு வை பார்த்ததும் மித்ரா ஆட்டம் கண்டு போய் மிரண்டு போய் பார்க்கிறாள். தன்னுடைய மகளை ஏமாற்றி விட்டதாக கம்பெனி வரை நந்தாவை தேடி வந்த பெரியவர் தான் கண்டிப்பாக அவனை கொன்று இருக்க வேண்டும் என்பது ரசிகர்களின் கணிப்பு. எப்படியும் இன்றைய எபிசோடில் அந்த உண்மை தெரிந்து விடும்.
சமீபத்தில் சிங்க பெண்ணில் நடந்த சம்பவங்கள்
- கொலையான நந்தா, பழியை சுமக்கும் ஆனந்தி
- சிங்க பெண்ணேக்கு பதிலா சில்லுனு ஒரு காதல்ன்னு வச்சுக்கலாம்
- சீரியல் பேர்தான் சிங்க பெண்ணே, செட்டில் பெண்களுக்கு நடக்கும் அநீதி