Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஆனந்தி, அன்பு மற்றும் நந்தா மூன்று பேருக்குமே வாழ்வா இல்லை சாவா என்னும் நிலைமை தான்.
நந்தாவை அழகனாக ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையில் ஆனந்தி சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறாள். அதே நேரத்தில் நீ என்னை கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என நந்தா அவளை மிரட்டி வருகிறான்.
அதே நேரத்தில் போலி அழகனை நம்பி ஆனந்தி ஏமாந்த விடக்கூடாது என்பதற்காக அழகாக நடித்துக் கொண்டிருப்பது யார் என்ற தேடுதல் வேட்டையில் இறங்கி இருக்கிறான் அன்பு.
நேற்றைய எபிசோடில் நந்தா நான் சொன்ன நாளில் நீ மலைக்கோவிலில் என்னை கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்றால் நான் மலையில் இருந்து விழுந்து செத்து விடுவேன் என வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறான்.
அதன் பின்னர் ஆனந்தி நந்தாவுக்கு போன் பண்ண முயற்சிக்கும் போது அவனுடைய போன் சுவிட்ச் ஆப் ஆகியிருக்கிறது. ஆபீசுக்கு போனால் நந்தா வேலையை விட்டு போய்விட்டதாக தெரிவிக்கிறார்கள். ஆனந்தி பெரிய மனக்குழப்பத்தில் இருக்கிறாள்.
ஆனந்தியை காப்பாற்றுவானா அன்பு ?
நந்தாவால் ஏமாற்றப்பட்ட பெண்ணின் அப்பா மீண்டும் அன்புவை தேடி ஆபிசுக்கு வருகிறார். இந்த முறை அன்புவை நேரில் பார்ப்பதோடு மட்டுமில்லாமல் நந்தாவின் புகைப்படத்தையும் காட்டுகிறார். இவ்வளவு நாள் நந்தா வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது இந்த புகைப்படம் சிக்கவில்லையே என அன்பு புலம்புகிறான்.
அதே நேரத்தில் அந்த பெண்ணின் அப்பா நந்தா ஒரு இடத்தில் இருந்து கிளம்புகிறான் என்றால் அங்கு இருக்கும் ஏதோ ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழித்து இருப்பான், நீங்கள் உஷாராக கண்டுபிடிங்கள் என சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.
அடுத்து அன்பு நந்தாவை தேடுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறான். இந்த நிலையில் ஆனந்தி நந்தா தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டி இருப்பதால் என்ன முடிவு எடுப்பாள் என்பது இனிவரும் எபிசோடுகளில் தான் தெரியும்.
சமீபத்தில் சிங்க பெண்ணில் நடந்த சம்பவங்கள்
- நந்தாவின் முகத்திரையை கிழிக்க அன்புக்கு கிடைத்த துருப்பு சீட்டு
- ஆனந்தியை லாக் பண்ண நந்தா போடும் பிளான்
- நந்தாவுக்கும், ஆனந்திக்கும் நடக்க இருக்கும் திருமணம்