ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

சிங்கப்பெண்ணில் சுயநலமாய் யோசித்த ஆனந்தி, பொங்கி எழுந்த அன்பு.. இனிதான் மகேஷின் ஆட்டம் ஆரம்பம்!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாக இருக்கிறது. எல்லா சீரியலிலும் ஏதாவது ஒரு கட்டத்தில் யார் ஹீரோ, யார் வில்லன் என்று தெரிந்துவிடும்.

ஆனால் சிங்க பெண்ணே சீரியலை பொருத்தவரைக்கும் அன்பு மற்றும் மகேஷ் இரண்டு பேரில் யார் ஹீரோ என்பது இன்றுவரை சவ்வாய் இழுத்துக் கொண்டிருக்கிறது.

ஒரு எபிசோடில் அன்பு மொத்தமாய் தன்னுடைய ஹீரோயிசத்தை காட்டி விடுகிறான்.

அப்படியே பார்த்தால் அடுத்த எபிசோடில் மகேஷ் அன்புக்கு மேலாக ஏதாவது ஒன்று செய்து ரசிகர்களிடம் பாராட்டை பெற்று விடுகிறார்.

அப்படித்தான் நேற்றைய எபிசோடு இருந்தது. அன்புவின் அம்மாவிடம் அன்பு துளசியை திருமணம் செய்து கொள்வான் என்று சொல்லித்தான் மகேஷ் அவனை வீட்டிற்குள் கொண்டு வந்தான்.

இனிதான் மகேஷின் ஆட்டம் ஆரம்பம்!

இதனாலேயே துளசி மற்றும் அன்புவுக்கு நிச்சயதார்த்தம் நடக்கும் போது எல்லோருடைய சந்தேகமும் மகேஷ் மீது இருந்தது.

ஆனால் அதை மொத்தமாக தவிடு பொடி ஆக்கிவிட்டான் மகேஷ். நேற்றைய எபிசோடில் அன்புவின் மாமா தன்னிடம் மகேஷ், அன்பு ஒரு பெண்ணை காதலிப்பதாக சொல்லிவிட்டார்.

வேறொரு பெண்ணை காதலிக்கும் உங்களை நான் எப்படி என் பெண்ணுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பேன் என கேட்கிறார்.

அதே நேரத்தில் அன்பு எல்லோர் முன்னிலையிலும் ஆனந்தியை தான் நான் காதலிக்கிறேன் என்ற உண்மையை சொல்கிறான்.

இது அன்புவின் அம்மாவிற்கு பேரதிர்ச்சியாக அமைகிறது. ஆனந்தியை நிச்சயமாக நான் என்னுடைய வீட்டு மருமகளாக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்கிறார்.

அன்பு மற்றும் மகேஷ் இருவருமே இந்த நிச்சயதார்த்தத்தை நிப்பாட்ட தங்களுடைய பங்குக்கு எல்லாம் செய்து விட்டார்கள்.

ஆனால் ஆனந்தி மட்டும் தன்னுடைய அக்கா கல்யாணம் நன்றாக நடக்க வேண்டும் என ரொம்பவே சுயநலமாக யோசித்து இருக்கிறாள் என்று தான் சொல்ல வேண்டும்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தன்னுடைய நிச்சயதார்த்தத்தை நிப்பாட்டியதற்காக அன்பு மகேசுக்கு நன்றி சொல்கிறான்.

அதே நேரத்தில் ஆனந்தியை காதலிப்பதை பற்றி சொல்வது போலவும் காட்டப்பட்டிருக்கிறது.

அன்பு நிஜமாகவே இந்த விஷயத்தை மகேஷிடம் சொன்னால் அதன் பிறகு தான் மகேஷின் வில்லத்தனமான ஆட்டமே ஆரம்பிக்கும்.

Trending News