Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாக இருக்கிறது. சீரியலில் நேயர்கள் எதிர்பார்க்காத திருப்பம் அன்பு தற்போது எடுத்திருக்கும் முடிவு.
அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் எப்போது சேர்வார்கள் என்பது தான் இந்த சீரியலின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு. இதற்கு எதிரியாக மகேஷின் காதல் இருப்பதாகத்தான் இவ்வளவு நாள் காட்டப்பட்டது.
ஆனால் தற்போது மொத்தத்திற்கும் எதிர்ப்பாக அமைந்திருப்பது அன்பு- மகேஷ் நட்புதான். மகேஷின் அம்மா அவனை வீட்டை விட்டு வெளியே போக சொல்லியதும் மகேஷ் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறான்.
காதலை உதறி தள்ளும் அன்பு
அதன் பின்னால் எங்கே போவது என்று தெரியாமல் மகேஷ் ரொம்பவும் கஷ்டப்படுவது போல் காட்டப்படுகிறது. மகேஷ் படும் கஷ்டத்தை அன்பு பார்த்துக் கொண்டே இருக்க முடியவில்லை.
இதனால் ஆனந்திக்கு போன் பண்ணி இது பற்றி பேசுகிறான். மேலும் நம்முடைய காதலால் தான் மகேஷ் இவ்வளவு கஷ்டப்படுகிறார் என்று சொல்கிறான்.
அது மட்டும் இல்லாமல் இந்த காதலே தேவையில்லை என்பது போலவும் பேசுகிறான். இது ஆனந்திக்கு மிகப்பெரிய கஷ்டத்தை கொடுத்ததால் கதறி அழுகிறாள்.
அன்பு எடுக்க முடிவை ஆனந்தி கொள்கிறாளா இல்லை மகேஷிடம் உண்மையை சொல்கிறாளா எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.