வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

Singapenne: நந்தா தான் அழகனா? அழுது புலம்பும் ஆனந்தி.. அன்பு எடுத்த அதிரடி முடிவு

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சிங்க பெண்ணே சீரியலின் நேற்றைய எபிசோடு பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போனது. அழகன் மற்றும் ஆனந்தி நேரில் சந்திக்கும் காட்சிக்காக ரசிகர்கள் பல நாட்களாக காத்துக் கிடந்தார்கள்.

காதல் கோட்டை கிளைமாக்ஸ் அஜித் மற்றும் தேவயானியின் சந்திப்பது போல் இந்த சீன் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடையில் இந்த நந்தா புகுந்து விளையாடி விட்டான். ஆனந்தியை மகேஷ் வெறுக்கும் அளவுக்கு ஏதாவது நடக்க வேண்டும் என்பது மித்ராவின் பல நாள் கனவு.

அப்படித்தான் ஆனந்தி அழகனை கட்டிப்பிடித்து காதலில் உருகும் போது அதை மகேஷ் நேரில் பார்க்க வேண்டும் என்று திட்டம் போட்டு இருந்தால் மித்ரா. ஆனால் அது மொத்தமும் சொதப்பிவிட்டது. நான் தான் அழகன் என்று நந்தா சொன்னதும் ஆனந்தி அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்று விட்டாள்.

நந்தாவும் எடுத்த உடனேயே அதிரடி காட்டக் கூடாது என அடக்கி வாசித்தது சிறப்பு. நல்லா யோசிச்சு முடிவு எடுத்துட்டு வா நான் உனக்காக காத்திருக்கிறேன் என்று சொல்லி நந்தா ஆனந்தியை அனுப்பி வைத்து விட்டான்.

அன்பு எடுத்த அதிரடி முடிவு

ஆனந்தி போன பிறகுதான் மகேஷ் கோயிலில் வந்து ஆனந்தியை தேடி அலைந்தான். இன்னொரு பக்கம் அன்பு ஆனந்தியை தேடி அலைந்து களைத்து போய் விட்டான். ஹாஸ்டல் ரூமுக்கு வந்த ஆனந்திக்கு எதனால் அழகனை நேரில் பார்த்தும் எதுவுமே பேச முடியவில்லை என்ற குழப்பம் இருந்து கொண்டே இருந்தது.

அதே நேரத்தில் அன்பு இத்தோடு இந்த அழகன் கேரக்டருக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என நினைத்து ஆனந்தியை தேடி புறப்பட்டான். ஆனந்தியை நேரில் பார்த்து அழகன் கேரக்டரை பற்றி பேச ஹாஸ்டல் வாசலில் அன்பு காத்திருப்பதோடு எபிசோட் முடிந்து இருக்கிறது.

ஒட்டுமொத்த பரபரப்புக்கும் உச்சம் சேர்க்கும் வகையில் இன்றைய எபிசோடு இருக்க போகிறது. ஆனந்தி அன்பு சொல்வதை காது கொடுத்து கேட்க போகிறாளா, இல்லை வழக்கம் போல அன்புவை பார்த்ததும் சாமியாட்டம் ஆடப்போகிறாளா என்பது இன்று தான் தெரியும்.

Trending News