வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சிங்கப்பெண்ணில் மகேஷிடம் உண்மையை சொன்ன அன்பு.. திகைத்து போன ஆனந்தி, இது தானே மித்ரா எதிர்பார்த்தது!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஒரு வழியாக இயக்குனர் ஒரு காதல் கான்செப்ட்டை முடித்து வைத்திருக்கிறார்.

இப்போது தான் உண்மையாகவே சிங்க பெண்ணே கான்செப்ட் தொடங்கி இருக்கிறது. இவ்வளவு நாள் யார் அழகன், ஆனந்தி யாருக்கு ஓகே சொல்வாள் என காதல் கண்டன்ட்டாகவே போய்க்கொண்டிருந்தது.

இப்போதுதான் சீரியல் சூடு பிடித்திருக்கிறது. செவ்வரக்கோட்டை தீமிதி திருவிழாவுக்கு மகேஷ் எல்லோரையும் கூட்டிக்கொண்டு போனதால் மிகப்பெரிய லாஸ் வந்ததாக மித்ரா தில்லை நாதனிடம் கச்சிதமாக போட்டுக் கொடுத்திருந்தாள்.

இதனால்தான் மகேஷ் வீட்டில் மிகப் பெரிய பூகம்பமே வெடித்தது. இப்போது அதைவிட மூணு மடங்கு லாபத்திற்கு புதிய ஆர்டர் ஒன்றை மகேஷ் கொண்டு வந்திருக்கிறான்.

மகேஷிடம் உண்மையை சொன்ன அன்பு

இதில் என்ன பெரிய விஷயம் என்றால் இந்த ஆர்டரை செய்ய முடியாது என கருணாகரன் மற்றும் அரவிந்த் பின்வாங்கி விட்டார்கள்.

ஆனால் அன்பு என்னால் முடியும் என்று சொல்லி மகேஷுக்கு தோளோடு தோள் கொடுத்து நிற்கிறான்.

ஒருவேளை இந்த விஷயம் வெற்றிகரமாக முடிந்து விட்டால் மகேஷுக்கு அன்பு மீது மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டு விடும்.

நேற்றைய எபிசோடில் அந்த ஆர்டரை மூன்று நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என எல்லோரும் களம் இறங்குகிறார்கள்.

அந்த நேரத்தில் கம்பெனியில் வேலை செய்யும் சாவித்திரி தன்னுடைய மகனுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி லீவு கேட்டு விட்டு செல்கிறார்.

சாவித்திரி இல்லாமல் ஒரு டெய்லர் குறைந்தால் எப்படி ப்ரொடக்‌ஷனை முடிக்க முடியும் என எல்லோரும் யோசிக்கிறார்கள்.

அந்த நேரம் அன்பு ஆனந்தியை நீ வா மெஷினில் வந்து உட்கார என சொல்கிறான். அப்போது கருணாகரன் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.

இந்த பிரச்சனை மகேஷ் காதுக்கு போக மகேஷ் கீழே இறங்கி வருகிறான்.

இந்த பிரச்சனையால் தான் மகேஷுக்கு ஆனந்தி டெய்லர் இல்லை ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து கொண்டிருக்கிறாள் என்பதே தெரிய வருகிறது.

ஆனந்தியை நான் டெய்லர் வேலைக்காக தான் எடுத்தேன் ஏன் அவளை ஹவுஸ் கீப்பிங் வேலை செய்ய வச்சீங்க என மகேஷ் கேள்வி கேட்கிறான்.

உடனே அன்பு கருணாகரனுக்கு ஆனந்தி மீது இருந்த தனிப்பட்ட காழ்புணர்ச்சி தான் இதற்கு காரணம் என்ற உண்மையை சொல்கிறான். மகேஷுக்கு இது மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்துகிறது.

இருந்தாலும் கருணாகரன் ஆனந்திக்கு தைக்க தெரியாது அதனால்தான் அவளை டெய்லராக உட்கார வைக்கவில்லை என்று சொல்கிறார்.

உடனே ஆனந்தி பொங்கி எழுந்து என்னால் தச்சி காட்ட முடியும் என்று கருணாகரனுக்கு சவால் விடுகிறாள்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கருணாகரனின் ஆதரவாக இருக்கும் உஷா மற்றும் ஆனந்தி இருவருக்கும் இடையே போட்டி நடக்கிறது.

இதில் யார் முதலில் மூன்று டிஷர்ட்களை வெவ்வேறு சைஸில் தைத்து முடிக்கிறார்கள் என்பதுதான் போட்டி.

ஆனந்தி தைப்பதற்கு சிரமப்படுவது போலவும் அவளுடைய மிஷின் வேலை செய்யவில்லை என்பது போலவும் காட்டப்படுகிறது.

எப்படியும் ஆனந்தி இந்த போட்டியில் ஜெயித்து விடுவாள் என்பது நன்றாக தெரிந்ததுதான். ஆனால் மூன்று நாட்களுக்குள் ப்ரொடக்‌ஷனை முடிக்கவில்லை என்றால் மித்ராவுக்கு அல்வா சாப்பிட்டது போல் ஆகிவிடும்.

மீண்டும் ஆனந்தி மற்றும் அன்பு மகேஷை விட்டு விலகி இருக்க வேண்டி தான்.

இப்படி ஒரு சந்தர்ப்பத்திற்காக தான் மித்ரா காத்துக் கொண்டிருந்தாள். இந்த சந்தர்ப்பம் மித்ராவுக்கு சாதகமாக முடிகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News