புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நான்தான் அழகன் என்ற உண்மையை சொன்ன அன்பு.. அடுத்த கட்ட திருப்பத்தை நோக்கி சிங்க பெண்ணே

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் நேயர்கள் ரொம்ப நாளாக எதிர்பார்த்த சம்பவம் நடந்து இருக்கிறது. அப்பாவின் திதி நாளில் ஆனந்தியிடம் நான்தான் அழகன் என்று அன்பு சொல்ல வேண்டும் என திட்டமிட்டான்.

நேற்று ஆனந்தி அன்பு வீட்டில் சமையல் செய்து, எல்லோருக்கும் பரிமாறிய விதம் அவனுடைய அம்மாவுக்கு ரொம்பவே பிடித்து விட்டது. அது மட்டும் இல்லாமல் பென்சிலால் வரைந்த அவர்களுடைய குடும்ப புகைப்படத்தை கொடுத்ததும் அன்புவின் அம்மா உச்சி குளிர்ந்து போய்விட்டார்.

அடுத்த கட்ட திருப்பத்தை நோக்கி சிங்க பெண்ணே

படையல் சாப்பாடு அன்பு உடன் சேர்ந்து யார் சாப்பிடுவது என கேட்கும் பொழுது, ஆனந்தி சாப்பிடட்டும் என அன்பும் என் அப்பா சொல்கிறார். அது மட்டும் இல்லாமல் நீ எங்கள் வீட்டில் ஒருத்தி மாதிரி இந்த படையல் சாப்பாடு நீ சாப்பிட்டால் எனக்கு மட்டுமில்லை, இறந்து போன என் கணவருக்கும் சந்தோஷம் தான் என சொல்கிறார்.

இதில் இருந்தே அம்மாவுக்கு ஆனந்தியை எவ்வளவு பிடித்து விட்டது என்பது அன்புக்கு தெரிந்து விட்டது. அடுத்த கட்டமாக ஆனந்தியிடம் நான் தான் அழகன் என அன்பு சொல்ல வேண்டும். ஆனந்தி மற்றும் அன்புவின் போட்டோக்கள் கொண்ட செயினை மொட்டை மாடியில் வைத்து அன்பு பார்த்துக் கொண்டிருக்கிறான்.

அந்த சமயத்தில் அன்புவின் நண்பன் மொட்டை மாடிக்கு வந்து விடுகிறான். அன்புதான் அழகன் என்ற சந்தேகம் வர முத்து அன்புவிடம் கேட்கிறான். அன்பு ஒவ்வொரு கட்டத்தில் அவன் தான் அழகன் என்பதை ஒத்துக் கொள்கிறான்.

அந்த இடத்தில் ஆனந்தி திடீரென வருவது போல் காட்டப்படுகிறது. எது எப்படியோ இவ்வளவு நாள் அழகன் யார் என்ற உண்மை யாருக்குமே தெரியாமல் இருந்தது. இனி முத்து ஒருவருக்காவது அழகன் யார் என தெரிந்துவிடும். இதனால் இனிவரும் எபிசோடுகளில் நிறைய திருப்பங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

Trending News