வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சிங்கப்பெண்ணில் அன்புவின் அம்மாவுக்கு உடந்தையாகும் மகேஷ்.. ஆனந்தி கண் முன்னே நடக்கும் அன்பு-துளசி நிச்சயம்!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகியிருக்கிறது. போன வாரம் எபிசோடு முழுக்க கம்பெனியில் நடந்த போட்டியில் மும்முரமாக இருந்தது.

இந்த வாரம் அதற்கும் மேலாக பெரிய அளவிலான ட்விஸ்ட் நடந்து கொண்டிருக்கிறது.

ஊரிலிருந்து அன்புவின் மாமா அத்தை சாதாரணமாக வந்தது போல் காட்டப்பட்டு இன்றைய நிச்சயதார்த்தம் வரை சென்று இருக்கிறது.

அன்புக்கு இந்த நிச்சயதார்த்தம் நடப்பது பெரிய அளவில் உடன்பாடு இல்லை. ஆனால் மகேஷ் பேச்சை கேட்டு ஆனந்தி வெத்தலை பாக்கு தானே மாத்துறாங்க நீங்க அமைதியா இருங்க என்று சொல்கிறாள்.

ஆனந்தி கண் முன்னே நடக்கும் அன்பு-துளசி நிச்சயம்!

ஒரு பக்கம் பார்த்தால் இது மகேஷ் போட்டிருக்கும் பெரிய பிளான் போல் தான் தெரிகிறது. நேற்றைய எபிசோடில் அன்பு அவனுடைய அம்மாவிடம் இந்த நிச்சய தாம்பூலம் நடக்க கூடாது என்று சொல்கிறான்.

அதற்கு அவனுடைய அம்மா இது நடக்கவில்லை என்றால் நான் இறந்து விடுவேன் என மிரட்டுகிறார். உடனே அன்பும் ஆனந்தியின் பேச்சைக் கேட்டு கோவிலுக்கு போகிறான்.

அங்கு நிச்சயதாம்பூல ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெறுகிறது. அன்பு தரப்பில் இருந்து முத்து, சௌந்தர்யா ஆகியோர் கோவிலுக்கு வந்து விடுகிறார்கள்.

ஆனால் அன்புவின் அம்மா ஆனந்தி வந்தால் தான் இந்த நிச்சய தாம்பூலம் நடக்கும் என சொல்கிறார். அன்பு ஆனந்திக்கு போன் பண்ணி எந்த காரணத்தை கொண்டும் நீ இங்கே வரவே கூடாது என்று சொல்கிறான்.

ஆனால் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மகேஷ் ஆனந்திக்கு போன் பண்ணி கோவிலுக்கு வர சொல்கிறான்.

நீ வரவில்லை என்றால் அன்புவின் அம்மாவுக்கு சந்தேகம் வந்துவிடும் என்று சொல்கிறான். இதை நம்பி ஆனந்தியும் கோவிலுக்கு போகிறாள்.

மகேஷ் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்தால் அன்புக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்து விட்டால் தன்னுடைய ரூட் கிளியர் ஆகிவிடும் என அவன் திட்டம் போட்டது போல் தான் தெரிகிறது.

எது எப்படியோ இன்றைய எபிசோடில் ஆனந்தி கண் முன்னாடி அன்பு மற்றும் துளசிக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது.

இதை அன்பு அமைதியாக பார்த்துக் கொண்டே இருக்கப் போகிறானா, இல்லை உண்மையை சொல்லப் போகிறானா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News