புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிங்க பெண்ணில் மகேஷிடம் உண்மையை சொல்லிய அன்பு, ஆனந்தி.. காதலை காப்பாற்ற எடுக்கும் கடைசி முயற்சி

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஆனந்தி அன்புவின் வீட்டில் இருந்து எப்படி வெளியேறுகிறாள் என்பதே நேற்றைய எபிசோடில் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.

அன்புவும் கில்லி பட ரேஞ்சுக்கு அம்மா மற்றும் தங்கச்சியை ஏமாற்றி ஆனந்தியை வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்து விட்டான். ஆனால் வீட்டை விட வெளியில்தான் இவர்களுக்கு பெரிய ஆபத்து காத்துக் கொண்டிருந்தது.

அன்பு கம்பெனியை விட்டு போய் விட்டான், ஆனந்தி ஹாஸ்டலை விட்டு போய்விட்டாள் என ரொம்பவும் குதூகலமாக இருந்தான் அரவிந்தன். இவர்கள் இரண்டு பேரையும் நேரில் பார்த்ததும் அவனால் கோபத்தை அடக்க முடியவில்லை.

அன்பு மற்றும் ஆனந்தி சென்று கொண்டிருந்த பைக் மீது காரை ஏற்றினான். ஆனால் அதிர்ஷ்டவசமாக இருவரும் தப்பித்து விட்டார்கள். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் மகேஷிடம் நடந்த விபத்தை பற்றி சொல்கிறார்கள்.

காதலை காப்பாற்ற எடுக்கும் கடைசி முயற்சி

அதுமட்டுமில்லாமல் அன்பு இது விபத்து மாதிரி தெரியவில்லை, யாரோ எங்களை கொலை செய்ய முயற்சி செய்தார்கள் என மகேஷிடம் சொல்கிறான். இது மகேஷுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது. அதே நேரத்தில் கம்பெனிக்கு போன அன்பு தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மகேஷ் மேஜை மீது பார்க்கிறான்.

அப்போது அழகன் தோன்றி சில பொருளை தொலைச்சுட்டா திரும்ப கிடைக்காது. அப்படித்தான் ஒரு பொண்ணோட மனசும் என்று சொல்கிறான். கண்டிப்பாக ஆனந்திக்காக மீண்டும் அன்பு கம்பெனியில் சேர அதிக வாய்ப்பு இருக்கிறது.

அதே நேரத்தில் ஆனந்தி முத்து, ஜெயந்தி மற்றும் சௌந்தர்யாவிடம் எப்படியாவது அன்புவை மீண்டும் கம்பெனிக்கு வரவைப்பேன் என்று சொல்கிறாள். ஒரு பக்கம் இந்த விஷயம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் மித்ராவின் தலையில் இடியை இறக்கி இருக்கிறார் மகேஷின் அம்மா.

மகேஷுக்கு கல்யாண வரன் வந்திருப்பதாகவும் அதைப்பற்றி மகேஷிடம் பேசும்படியும் சொல்கிறார். இவ்வளவு நாளைக்கு ஆனந்தி தான் தன்னுடைய எதிரி என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் தற்போது இப்படி ஒரு விஷயம் நடந்திருக்கிறது. இந்த கல்யாண பேச்சை தடுத்து நிறுத்த மித்ரா எந்த மாதிரி திட்டம் போடுகிறாள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News