Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் நந்தா சிக்க போகும் தருணத்திற்காக ரசிகர்கள் காத்து கிடக்கிறார்கள். கண்ணை உருட்டிக்கொண்டு, ஆனந்தியிடம் காதல் கதைகள் பேசும் போது பார்க்கவே சகிக்கவில்லை.
உண்மையை சொல்ல போனால் நந்தா வந்து நின்றாலே சேனலை மாற்றுபவர்கள் தான் இப்போது அதிகமாகி விட்டார்கள். நந்தாவை அழகன் என்று நம்பிக்கொண்டிருக்கும் ஆனந்தியை பார்த்தாலே இப்போது எல்லாம் கடுப்பாக இருக்கிறது.
அப்பா அம்மா கல்யாண நாள் கொண்டாட்டத்தில் ஆனந்தியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதை தெரிவிக்க மகேஷ் ஒரு புடவையை வாங்கிக் கொடுத்துவிட்டு காத்திருக்கிறான். அதே நேரத்தில் அதே நாளில் எப்படியாவது ஆனந்தியை மலைக்கோவிலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நந்தா திட்டமிட்டு ஒரு புடவை வாங்கி கொடுத்து இருக்கிறான்.
நேற்றைய எபிசோடில் அந்த புடவை ஆனந்தியின் கைக்கு வருவதோடு, புடவையின் கூடவே மஞ்சள் கயிறு சேர்ந்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் நீ என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் அதுதான் எனக்கு கடைசி நாள் என்று சொல்லி நந்தா ஒரே வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வைக்கிறான்.
இந்த முறை மிஸ் ஆகாது
ஆனந்தி போலி அழகனை நம்பி ஏமாந்து போவதை அன்பு அவளுடைய தோழிகளிடம் சொல்கிறான். ஆனால் ஆனந்தி இப்போது இருக்கும் நிலைமையில் அன்பு என்ன சொல்ல வருகிறான் என்பதை மட்டும் இல்லை அவளுடைய தோழியையும் நம்புவதாய் இல்லை.
இப்படி ஒரு சூழ்நிலையில் நந்தாவின் உண்மையான பெயர் அருண், அவன் இங்கே நடித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவனால் ஏமாற்றப்பட்ட ஒருவர் கம்பெனிக்கு வந்து சொல்ல இருக்கிறார். இரண்டு எபிசோடுகளுக்கு முன்பு நந்தாவை தேடி வந்த அவர் மயக்கம் போட்டு விழுந்து விடுவார், அதன் பின்னர் நந்தாவின் புகைப்படத்தை காட்டாமலேயே போய்விடுவார்.
ஆனால் இன்றைய எபிசோடில் அவர் நந்தாவின் புகைப்படத்தை அன்புவிடம் காட்டுகிறார். நந்தாவின் முகத்திரையை கிழிப்பதற்கு இதுவே உண்மையான திருப்பு சீட்டு. இதை அன்பு சரியாக பயன்படுத்தினால் ஆனந்தியை நந்தாவிடம் இருந்து காப்பாற்றி விடலாம்.
சமீபத்தில் சிங்க பெண்ணில் நடந்த சம்பவங்கள்
- போலி அழகனின் தோலுரிக்க போகும் அன்பு
- நந்தாவுக்கும், ஆனந்திக்கும் நடக்க இருக்கும் திருமணம்
- எதிர்நீச்சல் சீரியல் மாதிரி, சிங்கப்பெண்ணே சீரியலுக்கு ஏற்பட்ட சிக்கல்