சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

விஜய் டிவிக்கும் எனக்கும் செட் ஆகல.. ஒரே போடாக போட்ட தொகுப்பாளினி பாவனா

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பாவனாவும், மாகாபாவும் தொகுத்து வழங்கும் அழகுக்கே ஏராளமான ரசிகர்கள் உண்டு. இதைத்தொடர்ந்து பாவனா சிவகார்த்திகேயனுடன் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

அதன்பின் அவார்டு பங்ஷனிலும் தொகுத்து வழங்கும் அளவிற்கு தனது திறமையை மேம்படுத்திக் கொண்டார். இந்நிலையில் பாவனாவிற்கு கிரிக்கெட் போன்ற விளையாட்டு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் தொகுத்து வழங்க வாய்ப்பு வந்துள்ளது. ஆரம்பத்தில் பயந்து தயக்கத்தோடு சென்ற பாவனா அங்கும் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

ஆனால் சில வருடங்களாக விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சிகளிலும் பாவனாவை பார்க்க முடியவில்லை. தற்போது கிரிக்கெட், படத்தின் விழா, நிகழ்ச்சிகள் போன்றவற்றில் மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு பாவனா வந்துள்ளார்.

அதாவது கலர்ஸ் தமிழில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கயுள்ளார். ஆனால் விஜய் டிவியில் இருந்த பிரபலமான பாவனா கலர்ஸ் தமிழுக்கு சென்றது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதுமட்டுமல்லாமல் பாவனா விஜய் டிவி பக்கமே போக மாட்டேன் என்று கூறியுள்ளார்.

அதைப்பற்றி கூறுகையில் அவங்க ஸ்டைல் வேற, இப்ப என் ஸ்டைல் வேற. விஜய் டிவில இப்ப காமெடி நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் இருக்கிறது. அதனால இப்ப விஜய் டிவிக்கும், எனக்கும் செட்டாகாது என பாவனா கூறியுள்ளார்.

மேலும் ஜெயா டிவி எனக்கு முதல் முதலாக வாய்ப்பளித்த வெங்கட் ரமணி சார் தான் என்னை கலர்ஸ்-தமிழ் நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளார். அதனால்தான் அந்த நிகழ்ச்சியில் என்னால் மறுக்க முடியவில்லை. எவ்வளவு பெரிய உயரத்துக்கு போனாலும் ஆரம்பப் புள்ளியை யாரும் மறக்க கூடாது.

Trending News