ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஜனனிக்கு பதிலாக எதிர்நீச்சல் சீரியலில் கமிட் ஆகிய தொகுப்பாளனி.. சன் டிவியில் கெத்தாக வரப்போகும் ஜீவானந்தம்

Sun Tv Serial: இதோ வருது அதோ வருது என்று எதிர்நீச்சல் சீரியல் இரண்டாம் பாகத்துக்கு காத்துக் கொண்டு இருந்த மக்களுக்கு தற்போது ஒரு நற்செய்தியாக திருச்செல்வம் இன்ப அதிர்ச்சியை கொடுக்கப் போகிறார். அதாவது கோலங்கள் மற்றும் எதிர்நீச்சல் போன்ற வெற்றிகளை கொடுத்த இயக்குனர் மறுபடியும் சன் டிவி மூலம் வரப்போகிறார்.

அந்த வகையில் எதிர்நீச்சல் கதையின் இரண்டாம் பாகமா அல்லது வேறு ஒரு கதையின் மூலம் வருகிறாரா என்பது சற்று கேள்விக்குறியாக தான் இருக்கிறது. ஆனால் கதை அனைத்தும் ரெடி பண்ணி அதற்கான ஆர்டிஸ்ட்களையும் தயார் செய்து கொஞ்சம் கொஞ்சமாக சூட்டிங்கை நடத்தி வருகிறார் என்பது மட்டும் உறுதி ஆகிவிட்டது.

அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஜனனி, எதிர்நீச்சல் 2 சீரியலில் இருந்து விலகியதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு போட்டு இருந்தார். இதனை அடுத்து தற்போது வந்த தகவலின் படி ஜனனி கதாபாத்திரத்திற்கு பதிலாக, சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளனி மற்றும் ஜீ தமிழில் சீரியலில் புதுப்புது அர்த்தங்கள் நாடகத்தில் நடித்த பார்வதி நடிக்கப் போகிறார்.

new janani-parvathy
new janani-parvathy

மூன்றாவது முறையாக சன் டிவியில் சீரியலை கொண்டுவரும் திருச்செல்வத்துக்கு இந்த முறையும் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஏற்ப ஆர்டிஸ்ட்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில் சீரியலுக்கு இன்னும் அதிக அளவில் மெருகேற்றும் விதமாக வில்லன் கேரக்டருக்கு ஏற்ற ஆர்டிஸ்ட்களை தேடிக் கொண்டு வருகிறார்.

எந்த ஆர்டிஸ்ட் வந்தாலும் அதற்கு ஏற்ற மாதிரி நடிப்பை வாங்குவதில் திருச்செல்வத்துக்கு ஈடாக யாரும் கிடையாது. உதாரணமாக கோலங்கள் சீரியலில் ஆதி கேரக்டர் மற்றும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தை மறக்கவே முடியாது. அந்த வகையில் இப்பொழுது வர இருக்கும் புது நாடகத்திலும் மறக்க முடியாத அளவிற்கு ஒரு வில்லன் நிச்சயமாக இடம் பிடிக்கப் போகிறார்.

இன்னும் கூடிய விரைவில் எதிர்நீச்சல் கதை போல் திருச்செல்வம் சன் டிவியில் என்டரி கொடுக்கப் போகிறார். ஏற்கனவே இப்பொழுது புதுசாக வந்த மூன்று முடிச்சு சீரியல் மக்களிடம் பேர் ஆதரவை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் இடத்தை பிடித்து விட்டது. அந்த வகையில் இதற்கு ஈடு கொடுக்கும் வகையில் புத்தம் புது சீரியலுடன் எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் போட்டி போட தயாராகிவிட்டது.

Trending News