வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சாய்ரா பானு ஒரு தியாகி.. விவாகரத்து காரணம் இது தான், சங்கு ஊத ஆரம்பித்த அந்தணன்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு, விவாகரத்து செய்தியை அறிவித்ததிலிருந்து, பெரிய விவாதப்பொருளாக இது மாறியுள்ளது. இது தொடர்பாக அந்தணன் கூறிய சில விஷயங்கள் வைரலாகி வருகிறது, “பொதுவாக திரைத்துறையில், ஒரு சிலரை தான் மிஸ்டர் கிளீன் என்று அழைப்பார்கள். அப்படி ஏ.ஆர்.ரஹ்மானுடன் பெண்கள் விஷயத்தில் பக்கா ஜென்டில்மேன்.”

“ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டில் பார்த்து வைத்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால், அது காதல் திருமணம் தான். சென்னை எக்மோரில் உள்ள தர்காவிற்கு ரஹ்மான் அடிக்கடி செல்வது வழக்கம். அந்த தர்காவிற்கு அருகிலுள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் தான் சாய்ரா பானு..”

“நான் கேள்விப்பட்ட வரை, சாய்ரா பானு இந்த அறிவிப்பை வெளியிடும் வரை ஏ.ஆர். ரஹ்மானுக்கே இந்த விஷயம் தெரியாதாம்.. அவருக்கே.. அதிர்ச்சியாக தான் இருந்ததாம்..இவர்களுக்குள் ஒரு நீண்ட இடைவெளி வந்துவிட்டது. சாய்ரா உண்மையில் ஒரு தியாகி.. என்ன தான் ரஹ்மான் மனைவி எந்த அந்தஸ்து அவருக்கு கிடைத்திருந்தாலும், அவர் தனியாகவே பெரும்பாலான நேரத்தை செலவழித்துள்ளார். “

“பல நிறுவனங்களுடன் கைகோர்த்து பணியாற்றிவரும் ரஹ்மானால், அவரது மனைவியிடனோ, குடும்பத்துடனோ நேரம் செலவிட முடியவில்லை. இதனால், ரஹ்மானுக்கும் சாய்ராவிற்கமான பேச்சுவார்த்தையே இல்லாமல் போனதால் தான் இந்த முடிவை சாய்ரா எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த சமயத்தில், ரஹ்மானின் நண்பர்களும், சாய்ராவின் நண்பர்களும் குடும்பங்களும் இந்த விஷயத்தை தீர்த்து வைக்க பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.” “நிச்சயமாக இவர்கள் பிரிய வாய்ப்பு குறைவே.. பல சர்ச்சைகளில் சிக்கிய தனுஷே, இன்னும் விவாகரத்து செய்யவில்லை. இருவரும் சேர்ந்து வாழ தான் போகிறார்கள்.

அப்படி இருக்க, நிச்சயம் இவர்களுக்கு ஆகாது..” என்று கூறியுள்ளார். இதை கேட்ட நெட்டிசன்கள் .. “பரவா இல்லையே.. எப்போதும் சங்கு ஊத தானே பார்ப்பீர்கள். முதல் முறையாக வாயில் நல்ல வார்த்தை வந்துள்ளதே..” என்று நக்கல் செய்து வருகின்றனர்.

Trending News