தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆண்ட்ரியா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
ஆண்ட்ரியா படங்களில் நடிப்பது மட்டுமின்றி பல நடிகர்களின் படங்களில் பாடல் பாடியுள்ளார். விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படத்தில் ஆண்ட்ரியா பாடிய கூகுள் கூகுள் பாடல் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு ஒரு சில படங்களில் பாடல்கள் பாடியும், ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
ஆண்ட்ரியா நடிப்பில் தற்போது அரண்மனை 3 மற்றும் பிசாசு 2 ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன. இப்படத்தில் ஆண்ட்ரியாவுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் நாளுக்கு நாள் இப்படத்தினை பற்றிய செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேலும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது ஏதாவது புகைப்படங்கள் வெளியிடுவது மேலும் படத்தினை பற்றி அப்டேட்டினைவெளியிடுவது என தொடர்ந்து சேட்டையை செய்து வருகிறார்.
தற்போது ஆண்ட்ரியா அவரது சமூக வலைதள பக்கத்தில் குழந்தைப்பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் ஆண்ட்ரியாவுடன் அவரது சகோதரியும் உள்ளார். தற்போது இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.