தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆண்ட்ரியா. இவர் எப்போதுமே மற்ற நடிகைகளை போல கிடைக்கும் படங்களில் நடிக்காமல் ஏதாவது ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் இருந்தால் மட்டும் தான் நடிப்பார். அப்படி இவர் ஏகப்பட்ட வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ஆனால் படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறாததால் சற்று மன வருத்தத்தில் இருந்த ஆண்ட்ரியா இனிமேல் எந்த கதையாக இருந்தாலும் அதில் என்ன கதாபாத்திரங்கள் என பார்த்துதான் உறுதி செய்வேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பிசாசு 2 பாகம் படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை மிஷ்கின் இயக்கி உள்ளார். மிஸ்கின் இயக்கும் படங்கள் அனைத்திலுமே ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் இடம்பெற்றிருக்கும் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்துள்ளார். அதே போல் இந்த படத்தில் நீங்கள் பிசாசாகவும் நடித்துள்ளீர்ர்களா என கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு ஆண்ட்ரியா எனக்கும் பிசாசு படத்திற்கும் தொடர்பு உண்டு ஆனால் பிசாசு கதாபாத்திரத்திற்கும் எனக்கும் தொடர்பு உண்டா என்பதை படம் பார்த்தால் தான் தெரியும் என ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் ஆக கூறியுள்ளார்.

தற்போது படக்குழுவினர் படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் ஆண்ட்ரியா மிஸ்கின் இருவரும் இரவில் நடக்கும் காட்சியை எடுத்தது போல் தெரிகிறது இதனால் தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
