நடிகர் விவேக் மாரடைப்பால் இறந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இனிமேல் யார் தமிழ் சினிமாவில் தன்னுடைய நகைச்சுவையால் சமூக கருத்துக்களை திணித்து மக்களை சிந்திக்க வைப்பார்கள் என்கிற சோகம் நிலவி வருகிறது.
மேலும் பல நடிகர் நடிகைகளும் நடிகர் விவேக்குடன் தங்கள் பயணித்த பயணங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சிலர் விவேக் உடன் நடிக்க முடியவில்லை என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
பாடகியாக இருந்து பின்னர் நடிகையாக தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் ஆண்ட்ரியா விவேக்குடன் ஆரம்ப காலகட்டங்களில் ஒரு விளம்பர படம் ஒன்றில் நடித்ததை பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
விவேக் ஆரம்ப காலகட்டங்களில் விளம்பர படங்களிலும் நடித்தார். அப்படி அவர் நடித்ததில் பிரபலமான ஒரு விளம்பரம் என்றால் அது மிரண்டா என்ற கூல்ட்ரிங்ஸ் விளம்பரம் தான். இதில்தான் முதன் முதலில் ஆண்ட்ரியா அறிமுகமானாராம்.
அப்போது ஆண்ட்ரியா பார்ப்பதற்கு குண்டாக கொழுகொழுவென்று இருந்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்க்கும் போது இது ஆண்ட்ரியாவா என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது.

மேலும் தன்னுடைய முதல் ஹீரோ விவேக் தான் என்ற பதிவையும் உணர்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார் ஆண்ட்ரியா. தற்போது அந்த புகைப்படம் தான் இணையதளங்களில் செம வைரலாகி வருகிறது.
