வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வெற்றிமாறனிடம் இருந்த கெட்ட பழக்கம்.. தெரியாமல் மாட்டிக் கொண்டு கண்ணீர் விட்ட ஆண்ட்ரியா

பல தரமான படைப்புகளை கொடுத்து விருது இயக்குனராக இருக்கும் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை இயக்கி முடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த இதன் முதல் பாகம் நல்ல விமர்சனங்களை பெற்றது. அதை தொடர்ந்து அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பும் தற்போது அதிகமாகி இருக்கிறது.

இந்நிலையில் இவருக்கு இருந்த ஒரு கெட்ட பழக்கத்தால் அதிர்ந்து போன ஆண்ட்ரியா கண்ணீருடன் இடத்தை காலி செய்து இருக்கிறார். அதாவது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்த வடசென்னை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் ஆண்ட்ரியாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Also read: வெற்றிமாறன் தயாரித்து வியாபாரம் ஆகாத 5 படங்கள்.. தயாரிப்பாளராய் தோற்ற இயக்குனர்

அப்போது படம் சம்பந்தமாக அவர் வெற்றிமாறனை சந்திக்க சென்ற போது ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. என்னவென்றால் வெற்றிமாறனுக்கு அளவுக்கு அதிகமாக புகை பிடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. ஒரு நாளைக்கு நூறு சிகரெட்டுக்கு மேல் அவர் பிடிப்பாராம். அப்படித்தான் ஆண்ட்ரியா தன்னை சந்திக்க வரும் நேரத்திலும் அவர் புகை பிடித்துக் கொண்டு இருந்திருக்கிறார்.

இதனால் அவருக்கு எதிரில் அமர்ந்து கொண்டிருந்த ஆண்ட்ரியாவுக்கு மிகவும் அசௌகரியமாக இருந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் அந்த இடமே சிகரெட் புகையால் நிரம்பி வழிந்து இருக்கிறது. அதன் காரணமாகவே ஆண்ட்ரியா கண்ணை கூட திறக்க முடியாத அளவுக்கு எரிச்சலால் அவதிப்பட்டு இருக்கிறார்.

Also read: இந்த 2 முக்கிய காரணங்களால் விடுதலை பான் இந்தியா படமாக எடுக்கவில்லை.. தெனாவட்டான வெற்றி மாறன்

மேலும் சிகரெட் புகையால் அவருக்கு கண்ணில் இருந்து கண்ணீரும் வந்திருக்கிறது. இதனால் கடுப்பான ஆண்ட்ரியா வெற்றிமாறனிடம் நான் கிளம்புகிறேன் என்று கூறிவிட்டு கோபமாக அங்கிருந்து வெளியேறினாராம். திடீரென்று என்ன ஆனது, ஏன் கோபமாக கிளம்புகிறார் என்று தெரியாமல் அவர் முழித்தபடி இருந்திருக்கிறார்.

அதன் பிறகு தான் ஆண்ட்ரியாவுக்கு சிகரெட் அலர்ஜி என்று தெரிய வந்திருக்கிறது. உடனே அவரும் சிகரெட்டை அணைத்துவிட்டு மேற்கொண்டு பேசி இருக்கிறார். இந்த சம்பவம் பலருக்கும் புதிய தகவலாக இருக்கிறது. இப்படி ஒரு கெட்ட பழக்கத்துடன் இருந்த வெற்றிமாறன் இப்போது முற்றிலுமாக புகை பிடிப்பதை நிறுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது.

Also read: இளையராஜா அளவுக்கு வந்திருக்க வேண்டிய இசையமைப்பாளர்.. பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்த பாடல்கள்

Trending News