திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இந்த வார்த்தை சொல்லி அதுக்கு கூப்பிடாதீங்க.. டென்ஷனான ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா நடிக்கும் படங்கள் அனைத்திலுமே அவரது கதாபாத்திரங்கள் ரசிக்கும்படி இருக்கும் என்பதால் மாஸ்டர் படத்தில் ஆண்ட்ரியாவை பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் லோகேஷ் கனகராஜ் ஒரு ஊறுகாய் அளவுக்கு கூட அவரை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது தெரிந்து ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இது ஆண்ட்ரியாவுக்கே கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது. இதனால் இனி முன்னணி நடிகர்களின் படங்களில் ஒப்புக்கு சப்பாணி கதாபாத்திரங்களில் சத்தியமாக நடிக்க மாட்டேன் என முடிவெடுத்துள்ளாராம்.

இதனால் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து கொண்டிருக்கிறாராம். அந்த வகையில் அடுத்ததாக அவள் 2, பிசாசு 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பெரிய தயாரிப்பாளர் ஒரு முன்னணி இயக்குனருடன் சேர்ந்து டாப் ஹீரோ ஒருவரின் படத்தில் ஆண்ட்ரியாவை கெஸ்ட் ரோலில் நடிக்க வைப்பதற்காக பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளார்.

பெரிய தயாரிப்பாளர் என்றதும் அழைத்துப் பேசிய ஆண்ட்ரியா, கதையில் தனக்கு முக்கியத்துவம் இல்லாததை அறிந்து டென்ஷனாகி விட்டாராம். இனி இந்த மாதிரி கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டு வர வேண்டாம் என மூஞ்சியில் அடித்தபடி கூறி அனுப்பிவிட்டாராம்.

andrea-cinemapettai-01
andrea-cinemapettai-01

மேலும் கெஸ்ட் ரோல் என்ற வார்த்தையை கேட்டாலே கடுப்பாக இருக்கிறது என்றும், அந்த வார்த்தை சொல்லி இனி யாரும் என்கிட்ட வரக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டாராம். இதன்மூலம் மாஸ்டர் படத்தினால் ஆண்ட்ரியா பல விமர்சனங்களுக்கு ஆளாகி விட்டார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

Trending News