ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

அங்காடித் தெருவில் அஞ்சலி முதல் சாய்ஸ் இல்லை.. வசந்தபாலன் கூறிய சீக்ரெட்!

மகேஷ் மற்றும் அஞ்சலி நடிப்பில் 2010ல் திரைக்கு வந்த திரைப்படம் அங்காடி தெரு. இயக்குனர் வசந்தபாலனின் படைப்பான இப்படம் அப்போதய தருணத்தில் சிறிய பட்ஜெட்டில் நல்ல கலெக்சன் எடுத்த படமாகும்.

சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள பெரிய கடைகளில் பணியாற்றும் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கையை பகிரங்கமாக எடுத்துக்காட்டி இருப்பார் வசந்த். சரி அது முடிந்த கதை இப்போது இதைப்பற்றி பேச என்ன இருக்கு என்றால்.

இயக்குனர் வசந்த பாலன் ஒரு சந்திப்பில் கூறுகையில் அஞ்சலிக்கு பதிலாக வேறு ஒருவரை ஹீரோயினாக பிக்ஸ் செய்ததாகவும் பிறகு மாற்றியமைக்கப்பட்டதாகவும் கூறினார்.

அதிலும் அந்த கதாநாயகியும் இப்படத்தில் நடித்திருப்பதாகவும் கூறியிருந்தார். காதல் கடிதத்திற்காக தற்கொலை செய்து கொள்வதாக ஒரு சீனில் நடித்திருப்பார்.

அவர்தான் முதலில் இப்படத்திற்காக தேர்வு செய்யப்பட்ட கதாநாயகியாம் பிறகு தான் அஞ்சலி ஒப்பந்தமானாராம். ஆனால் அஞ்சலியின் கதாபாத்திரம் மிக பொருத்தமாக அமைந்தது படம் வசூல் ரீதியாக, விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப் போவதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனர். ஆனால் அது சாத்தியமில்லை என்று இயக்குனர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

angadi-theru
angadi-theru

Trending News