Bigg Boss Tamil 8: இதுவரை ஆட்டம் சூடு பிடிக்காமல் இருந்தாலும் இந்த ஒரு டாஸ்க் மூலம் மொத்த போட்டியாளர்களும் அவர்களுடைய விளையாட்டை தரமாக விளையாடி வருகிறார்கள். அதிலும் பிசாசாக விளையாடி வரும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஏஞ்சல்களை அழ வைப்பதில் கில்லாடியாக இருக்கிறார்கள். முக்கியமாக மஞ்சரி, சாச்சனா செய்த காரியங்கள் அனைத்தும் தேவதைகளை சீண்டி விடும் விதமாக அமைந்தது.
அதாவது பவித்ரா எல்லா இம்சையும் பொறுத்துக் கொண்டு அவருடைய விளையாட்டை விளையாடி வருகிறார். ஆனால் அன்சிதாவிற்கு கொடுக்கப்பட்ட டாஸ்கை பண்ண முடியாமல் டென்ஷன் ஆகிவிட்டார். அதாவது கீழே கிடக்கும் பொருட்களை வாயில் தடவுவதும், முகத்தில் தடவுவதும் சாச்சுனா தொடர்ந்து இம்சை கொடுத்ததால் அன்சிதா இந்த விளையாட்டு எனக்கு வேண்டாம் என்று அழுது ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பித்து விட்டார்.
அந்த வகையில் இந்த பிக்பாஸ் வீட்டை விட்டு நான் வெளியே போகிறேன் கதவைத் திறந்து விடுங்கள் என்று வாசல் முன்னாடி தர்ணா பண்ணும் அளவிற்கு மொத்த கோபத்தையும் கொட்டிக்கிறார். மன அழுத்தத்தில் இருக்கும் அன்சிதாவை சமாதானப்படுத்துவதற்காக பவித்ரா பேசுகிறார். பவித்ரா சொல்ல வருவதை காது கொடுத்து கேட்காமல் அன்சிதா திட்டி விடுகிறார்.
இந்த சண்டையில் அருண் உள்ளே நுழைந்து பவித்ராவை அன்சிதாவை விட்டு போக சொல்கிறார். ஆனால் பவித்ரா நான் ஏன் போக வேண்டும் நான் அன்சிதாவிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று சொல்லிய நிலையில் அருணுக்கும் பவித்ராக்கும் வாக்குவாதம் முக்தி விட்டது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் ஜெப்ரியை சீண்டியதால் கையில் வைத்திருந்த இதயத்தை கொடுத்து ஏஞ்சல் டிரஸ் மாத்தி கோபமாக சண்டை போட ஆரம்பித்து விட்டார்.
ஆக மொத்தத்தில் இந்த விளையாட்டு ரொம்ப சீரியஸ் ஆகவும், வன்மத்துடனும் போய்க்கொண்டிருக்கிறது. மேலும் இதிலிருந்து டீமாக விளையாடிய அணியில் கொஞ்சம் விரிசல் ஏற்பட்டது போல் ஒவ்வொருவரும் தனியாக போகப் போகிறார்கள். ஆனால் யாரெல்லாம் மன அழுத்தத்தில் அழுது புலம்புகிறார்களோ அவர்களை சமாதானப்படுத்துவதற்கு அருண் மற்றும் ஜாக்லின் மெனக்கீடு செய்து ஒவ்வொருவரையும் சமாதானப்படுத்தி வருகிறார்கள்.