புதன்கிழமை, ஜனவரி 22, 2025

லேடி சூப்பர் ஸ்டாருடன் போட்டி போட நினைக்கும் அஜித்தின் ரீல் மகள்.. அசந்துபோன கோலிவுட்!

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான அனிகா சுரேந்திரன் பிரபல நடிகையாக உருவாவதற்கு பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடக்கூடிய நடிகர் அஜித். இவருக்கு மகளாக என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் படத்தில் நடித்து அஜித்தின் அனைத்து ரசிகர்களிடமும் கவனத்தை ஈர்த்தார்.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த அனிகா தற்போது மற்ற நடிகைகளை போல தானும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் அடுக்கடுக்கான பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

முதலில் இவர் சமூகவலைத்தள பக்கத்தில் போனால் பாவாடை தாவணியுடன் எடுத்த புகைப்படத்தை மட்டும் வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார். ஆனால் சமீபகாலமாக இவர் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை என்றுதான் கூற வேண்டும்.

ஏனென்றால் மற்ற நடிகைகள் போல இவரும் கிளாமரில் பல புகைப்படங்களை எடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ரசிகர்களுக்கு விருந்தாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறார்.

தற்போது இவர் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பிரவுன் கலரில் உடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ம குட்டி அணிக்காக இப்படி மாடலாக உள்ளார் என விமர்சனம் செய்து வருகின்றனர்.

anikha
anikha

அதுமட்டுமில்லாமல் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க முடிவு செய்துள்ளதால் விரைவில் நயன்தாரா கூட ஓரங்கட்டி விடுவார் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இது சாத்தியமாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

anikha
anikha

கோழி குஞ்சு கூட பிற்காலத்தில் கோழியாக மாறுவது போலத்தான் குட்டியாக இருந்த அனிகா தற்போது வளர்ந்த அனிகாவாக மாறி உள்ளார் என கூறிவருகின்றனர்.

Trending News