புதன்கிழமை, ஜனவரி 22, 2025

அமுல் பேபி போல் சிக்குன்னு மாறிய அனிகா..

என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அனிகா. இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து ரசிகர்களிடம் தனது கவனத்தை ஈர்த்தார். மேலும் அஜித்துக்கு திரை மகளாக இவரை ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர்.

அதன் பிறகு நானும் ரவுடி தான் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பின்பு ஜெயம் ரவி நடிப்பில் உருவான மிருதன் படத்தில் ஜெயம்ரவிக்கு தங்கச்சியாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார்.

மீண்டும் அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் ரசிகர்கள் அனைவரும் இவரை கொண்டாடினர். மேலும் இவர் அஜித்துடன் இரண்டு படங்கள் நடித்துள்ளதால் அஜித் ரசிகர்கள் இன்றளவும் இவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

இவர் எப்போதுமே அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிப்பது மட்டுமில்லாமல் தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

தற்போது அவர் சமூக வலைதளப் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஏதோ பனிப்பிரதேசத்தில் எடுத்த மாதிரி அந்த புகைப்படங்கள் காட்சி அளித்து உள்ளன. ஆனால் உண்மையிலேயே பனிப்பிரதேசத்தில் தான் எடுத்தாரா என்பது தெரியவில்லை.

மேலும் பூஜ்ஜியத்தில் இருந்து கீழே சென்று சூரியனை மறப்போம் எனவும் பதிவிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Trending News