தமிழ்சினிமாவில் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்தவர் அனிகா. இதன் மூலம் தமிழ் சினிமாவில் ஓரளவிற்கு தெரியக்கூடிய குழந்தை நட்சத்திரமாக பிரபலமானார்.
இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனிகாவிற்கு தொடர்ந்து பலவிதமான சர்ச்சைகள் வருகின்றன.
சமீபத்தில் கூட ஏதோ ஒரு பெண் அரைகுறை ஆடையுடன் நடனமாடிய வீடியோவில் அனிகாவின் முகத்தை வைத்து வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில் செம வைரலானது.
இதனை அறிந்த அனிகா அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் அந்த வீடியோவில் நடனமாடியது நான் இல்லை வேறு ஒரு நபர் என விளக்கம் அளித்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அனிகா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.