புதன்கிழமை, ஜனவரி 22, 2025

காதலிக்க சொல்லி அனிகாவை மிரட்டிய ரசிகர்.. தூக்கு போட்டுக்குவேன் என்றதால் பரபரப்பு

தல அஜீத் படங்களில் பெரும்பாலும் அவருக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது விரைவில் ஹீரோயினாகவும் ஒரு படத்தில் அறிமுகமாக உள்ளார்.

மலையாள நடிகையான இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். பெரும்பாலும் முன்னணி நடிகர்களுக்கு மகள் கதாபாத்திரத்தில் நடித்து வந்த அனிகா முதன்முதலாக தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயின் ஆகிவிட்டார்.

இந்த படத்திற்கான அறிவிப்புகள் விரைவில் வரும் என தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் எப்போதுமே தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்த முறை புகைப்படங்கள் வெளியிடாமல் நேரடியாக ரசிகர்களுடன் உரையாடியபோது ரசிகர் ஒருவர் என்னுடைய காதலை ஏற்க மறுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ந்துபோன அனிகா, இப்படியெல்லாம் பேச வேண்டாம் எனவும், ஏற்கனவே இது போன்ற அனுபவம் எனக்குள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இணையத்தில் கிசுகிசுக்க தொடங்கியுள்ளனர்.

ஏற்கனவே அனிகா யாரையாவது காதலிக்க வேண்டும் எனவும், காதல் செய்யுமாறு வற்புறுத்தியிருக்கலாம் எனவும் ஆளாளுக்கு ஒரு சர்ச்சையைக் கிளப்பி விட்டனர். பொழுது போகவில்லை என இன்ஸ்டாகிராம் பக்கம் வந்தால் சோலியை முடித்து விடுவார்கள் போல என வருத்தப்பட்டு அப்பீட் ஆகிவிட்டார் நம்ம அனிகா.

anikha-cinemapettai-01
anikha-cinemapettai-01

Trending News