சினிமாவில் அஜித்துக்கு மகளாக நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் அஜித்தின் உண்மை மகளாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்தான் அனிகா சுரேந்திரன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக அடியெடுத்து வைக்க உள்ளார்.
அதற்கு அச்சாரம் போடும் வகையில் நாளுக்கு நாள் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வித விதமான உடையணிந்து வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அதற்கு ரசிகர்கள் பலவகையில் கமென்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அஜித் ரீல் மகள் அனிகா சுரேந்திரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீல நிற உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் அனிகாவை பார்த்து ரசிகர் ஒருவர், Y so F**king cute? என அவரது அழகை வர்ணிக்கும் வகையில் பாப்புலரான கெட்ட வார்த்தை ஒன்றை பயன்படுத்தி கமெண்ட் செய்துள்ளார்.
அதற்கு அனிகா கொஞ்சமும் கூச்சப்படாமல், எனக்கு தெரியாது என அசால்ட்டாக பதில் கூறியுள்ளார். சின்ன பெண்ணை வர்ணிப்பதற்கு ஒரு வரைமுறை வேண்டாமா என ரசிகர்கள் அந்த கமெண்ட் செய்த ரசிகரை கிழி கிழி என்று கிழித்து வருகின்றனர்.
![anikha-replied-fan-comment](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/01/anikha-replied-fan-comment.jpg)
சின்ன நயன்தாரா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அனிகா சுரேந்திரன் விரைவில் ஹீரோயினாகவும் அறிமுகமாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.