வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மாமானு கூட பாக்காம அனிருத் வைத்த செக்.. ரஜினி மார்ல பாய்ந்த செல்லமாய் வளர்த்த கடா

ரஜினி கடந்த 12ஆம் தேதி தனது 74வது பிறந்த நாளை கொண்டாடினார். கூலி படத்தின் ப்ரோமோ வெளிவந்து ரஜினி ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது. ரஜினி இந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு பிறகு ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்.

ஏற்கனவே சுமார் 640 கோடி வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது ஜெயிலர் படம். இப்பொழுது அதன் இரண்டாம் பாகத்தை கையில் எடுத்திருக்கிறது நெல்சன் மற்றும் சன் பிக்சர்ஸ். முதல் பாகத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்

இப்பொழுது இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தை போல் இல்லாமல் அனைத்து நடிகர்களுக்கும் நிறைய காட்சிகள் ஒதுக்குமாறு ரஜினி, நெல்சன் இடம் கூறியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த மோகன்லால் மற்றும் சிவராஜ் குமார் இருவரும் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள்.

பின்னணி இசையில் மிரட்டிய அனிருத் தான் இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்கிறார். ஏற்கனவே முதல் பாகத்தில் ரஜினிக்காக இவர் எழுதிய பாடலும் போட்டபின்னணி இசையும் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆவதற்குமுக்கிய பங்கு வகித்தது. ரஜினியே இதை மேடையில் சொல்லி சிலாகித்து அனிருத்துக்கு முத்தமிட்டார்.

இப்பொழுது இரண்டாம் பாகத்துக்கு இசையமைப்பதற்காக அனிருத் 17 கோடிகள் சம்பளம் கேட்கிறாராம். இதனால் சன் பிக்சர்ஸ் ஆடிப்போய் உள்ளது. ஏற்கனவே அனிருத் இந்தியன் 2 படத்திற்காக வாங்கிய சம்பளம் 14 கோடிகள். அந்தப் படத்தின் பாட்டுகள் எதுவும் எடுபடவில்லை.

Trending News