புதன்கிழமை, ஜனவரி 22, 2025

நயன்தாராவுடன் குத்துப்பாட்டில் அனிருத்.. சாண்டி மாஸ்டர் ஆட்டத்தில் விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். தற்போது வரை இவருக்கான மார்க்கெட் சிறிதும் குறையவே இல்லை. அது மட்டுமின்றி கைவசம் ஏராளமான படங்களையும் வைத்துள்ளார். முதன் முறையாக அட்லி மற்றும் ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் புதிய படம் மூலமாக நயன்தாரா பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழில் நயன்தாரா பிரபல இயக்குனரும் நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் கதை எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகை சமந்தா ஆகியோரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. விரைவில் படப்பிடிப்பு முடிந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியான நிலையில் வரும் 18ஆம் தேதி இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. Two Two Two என தொடங்கும் இந்த பாடலை பிரபல இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

anirudh-cinemapettai
anirudh-cinemapettai

இந்நிலையில் இப்பாடலில் இசையமைப்பாளர் அனிருத் நடித்துள்ளதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. அனிருத் ஏற்கனவே தலைவா, மாரி போன்ற படங்களில் இடம் பெற்ற பாடல்களில் தோன்றி நடனமாடி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்தப் படத்திலும் அவர் நடனமாடி இருக்கலாம் என தெரியவருகிறது.

ஏற்கனவே விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளதால் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பாடலில் அனிருத் நடித்துள்ளார் என்ற செய்தி ரசிகர்களுக்கு மேலும் இன்னும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. படம் எப்போது வெளியாகும் என ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவன் வெளியிட்ட அனிருத் டான்ஸ் வீடியோ

Trending News