புதன்கிழமை, ஜனவரி 22, 2025

விஜய்க்கு செய்யாததை ரஜினிக்காக செய்த அனிருத்.. ஹைப்பை ஏற்றிய ஜெயிலர்

இப்போது டாப் நடிகர்களின் படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார். அந்த வகையில் விஜய்யின் லியோ, ரஜினியின் ஜெயிலர், ஷாருக்கானின் ஜவான் ஆக்கிய படங்களுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் ஜெயிலர் படத்தின் பாடல்கள் வெளியானது.

இதில் முதல் பாடலான காவாலா பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டானது. அடுத்ததாக ஹூக்கும் பாடல் வெளியான நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதில் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு பல பேர் போட்டி போட்டு கொண்டிருப்பதாக பாடல் வரிகள் அமைந்திருந்தது. அந்த வரிகள் விஜய்யை குறிப்பிட்டதன் எழுதப்பட்டுள்ளது என்ற சர்ச்சை வெடித்தது.

Also Read: 500 கோடி கொடுத்தாலும் உன் படத்துல நடிக்க முடியாது.. ஜெயிலர் மீது செம கடுப்பில் இருக்கும் விஜய்

இந்நிலையில் ஜெயிலர் படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு சமீபத்தில் பிரம்மாண்டமாக இப்படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷன் நடைபெற்றது. மேலும் இதுவரை அனிருத் செய்யாத ஒரு விஷயத்தை ஜெயிலர் படத்திற்காக செய்திருக்கிறார்.

கண்டிப்பாக ஜெயிலர் படம் வெற்றி பெறும் என்ற கணிப்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெயிலர் என்று கோப்பையுடன் ட்வீட் செய்து உள்ளார். ஆகையால் அனிருத் ஜெயிலர் படத்தை முன்பே பார்த்துவிட்டார் என்றும் படம் வேற லெவலில் உள்ளது என ரசிகர்கள் இப்போதே கணிக்க தொடங்கி விட்டனர். ஆனால் விஜய்யின் முந்தைய பல படங்களுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

Also Read: ஜெயிலர் படம் எல்லாம் சும்மா ட்ரைலர் தான்.. தலைவர்-170 யில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா?

ஆனால் ஒரு முறை கூட படம் வெளியாவதற்கு முன்பு இவ்வாறு ட்வீட் செய்ததில்லை. ஆனால் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்திற்காக இவ்வாறு செய்து உள்ளதால் படத்தின் ஹைப் அதிகமாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஜெயிலர் படத்தில் விஜய்யை விமர்சிக்கும் படியான வார்த்தைகள் இடம்பெறும் போது அனிருத் எப்படி சம்மதித்தார் என்ற கேள்வி எழுந்தது.

anirudh-twit
anirudh-twit

இப்போது மீண்டும் ரஜினிக்கு சப்போர்ட் செய்யும்படி அனிருத் போட்ட பதிவால் விஜய் ரசிகர்கள் கடுப்பில் இருக்கிறார்கள். ஜெயிலர் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் இந்த படத்தைப் பற்றிய செய்திகள் அடிக்கடி வெளியாகி வருகிறது. அந்த வகையில் அனிருத் ஜெயிலர் படத்தின் எதிர்பார்ப்பை சற்று அதிகப்படுத்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read: எங்க சிங்கத்தை அசிங்கப்படுத்திட்டியே நெல்சா.. ஜெயிலர் வீடியோவை பார்த்துட்டு கொத்து பரோட்டா போட்ட பயில்வான்

Trending News