வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.. விஜய், ரஜினியை வைத்து குளிர் காயும் அனிருத்

Anirudh : ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் அதேபோல் தான் இரு நடிகர்களிடையே போய்க் கொண்டிருக்கும் பிரச்சனையில் குளிர் காய்ந்து வருகிறார் இசையமைப்பாளர் அனிருத். இப்போது வெளியாகும் பெரிய நடிகர்களின் படங்கள் அனிருத் கைவசம் தான் இருந்து வருகிறது.

நிக்க கூட நேரம் இல்லாத அளவுக்கு பல படங்களில் பிசியாக இருக்கிறார். மேலும் ஆரம்பத்தில் அஜித்தின் விடாமுயற்சி படத்தைக் கூட அனிருத் ஏற்க மறுத்துவிட்டார். ஏனென்றால் அந்த அளவுக்கு அவரது கைவசம் படங்கள் நிறைய இருக்கிறதாம். ஒரு தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான ரஜினி மற்றும் விஜய்யின் படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.

Also Read : அனிருத்தை டேட்டிங் செய்து விட்டு கழட்டிவிட்ட 5 நடிகைகள்.. மார்க்கெட்டை சோலி முடிக்க லீக்கான புகைப்படம்

அதன்படி லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான நா ரெடி என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலில் விஜய் அரசியலுக்கு வருவதை வெட்ட வெளிச்சமாக காட்டும் படியாக அனிருத் பாடல் எடுத்திருந்தார். அதேபோல் ஜெயிலர் படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் வைரலானது. இந்நிலையில் நேற்றைய தினம் ஹுக்கும் என்ற செகண்ட் சிங்கிள் வெளியானது. இதில் தெள்ள தெளிவாக விஜய்யை பற்றி செய்யும் படியான பாடல் வரிகள் இடம் பெற்றிருந்தது. இதற்கு எப்படி அனிருத் இசையமைத்தார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Also Read : அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 இசையமைப்பாளர்கள்.. ஆஸ்கர் நாயகனையே ஓவர் டேக் செய்யும் அனிருத்

ஏனென்றால் விஜய்யின் சமீபகால படங்களில் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். அதுவும் நெல்சன், அனிருத் கூட்டணியில்தான் விஜய்யின் பீஸ்ட் படம் உருவானது. இப்படி இருக்கும் போது ரஜினிக்காக இவர்கள் இருவரும் இணைந்து விஜய்யை இப்படி அசிங்கப்படுத்தி விட்டார்களே என விஜய் ரசிகர்கள் கொந்தளித்த வருகிறார்கள்.

அதாவது இரு தரப்பு ரசிகர்களிடையே பிரச்சனையாக இருந்தாலும் தன்னுடைய பாடல் வெற்றியடைந்தால் போதும் என்பதுதான் அனிருத் நிலைப்பாடா என்ற கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள். மேலும் எந்த கூச்சமுமே இல்லாமல் விஜய் சாதகமாகவும், ஒருபுறமும் எதிராகவும் ஒருபுறமும் அனிருத் செயல்பட்டு வருகிறார்.

Also Read : தயாரிப்பாளர் தலையில் இடியை இறக்கிய தமன்.. இதுக்கு அனிருத் எவ்வளவோ பரவால்ல

Trending News