வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அனிருத்தை துரத்திப் பிடித்த அட்லி.. கூட்டு சேர்ந்த சன் பிக்சர்ஸ்

தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் ‘ஒய் திஸ் கொலவெறி டி’ பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் ட்ரெண்ட் ஆனவர் இசையமைப்பாளர் அனிருத். அதன்பிறகு இவர் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களில் மட்டுமே இசையமைத்துக் கொண்டிருந்தார்.

அனிருத் தற்போது விஜய், அஜித், ரஜினிகாந்த், கமலஹாசன், சிவகார்த்திகேயன் முன்னணி பிரபலங்களின் படங்களுக்கெல்லாம் இவர்தான் இசையமைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் இசை அமைத்த விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் வசூல் வேட்டை ஆடிக் கொண்டிருக்கிறது.

அனிருத் தமிழ் சினிமாவில் ஹீரோக்களை விட பிசியாக சுற்றி

வந்திருக்கிறார். இந்த வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஆறு ஏழு படங்களை முடித்துக் கொடுத்திருக்கிறார். இன்னும் கைவசம் நிறைய படங்கள் வைத்திருக்கிறார். அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிசியாக இருக்கும் அனிருத் புத்துணர்ச்சிக்காக அவ்வபோது சுற்றுலா செல்வதை விரும்புவார்.

அதிலும் இவருக்கு வெளிநாடுகளில் அதிகம் பிடித்த ஊரான அமெரிக்காவிற்கு அடிக்கடி செல்வதுண்டு. விக்ரம் படம் சமீபத்தில் முடிந்ததையொட்டி கொஞ்ச நாட்கள் ஓய்வெடுக்கலாம் என்று 15 நாட்கள் வெளிநாடு போய் வரலாம் என்று திட்டமிட்டிருக்கிறார். திடீரென்று அவரது நண்பரான அட்லி போன் செய்து ஜவான் படத்தில் கொஞ்சம் வேலை இருக்கிறது முடித்துக் கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். எனவே இந்தப் படத்தை இயக்கும் அட்லி, அனிருத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் நட்பே துணை என்பதை ஆழமாக நம்பும் அனிருத் நண்பர் சொல்லியபின் தட்டவா முடியும். சரி என்று ஒத்துக் கொண்டாராம்.

அதன் பின் திடீரென சன் பிக்சர்ஸ் அனிருத்தை அழைத்து தனுஷ், நித்யா மேனன் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு ரீ ரெக்கார்டிங் போட்டு தருமாறு கால்சீட் வாங்கிவிட்டனர். இப்பொழுது பழையபடி பிசியாக மாறிவிட்டார். வெளிநாடு இன்ப சுற்றுலா செல்ல ஆசைப்பட்டவர் ஆசையில் பெரிய மண்ணை போட்டு விட்டனர்.

Trending News