வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஆண்ட்ரியாவின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த அனிருத்.. புள்ளி வைத்து கோலம் போட்ட பிரபல நடிகை

ஆண்ட்ரியாவுடன் காதலை முறித்துக் கொண்டதை அனிருத் பல வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டது, தற்போது வைரலாகி வருகிறது. தனுஷ் நடிப்பில் வெளியான, 3 திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.

அதன் பின்பு தளபதி விஜய், தல அஜித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,உலக நாயகன் கமலஹாசன் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார். மேலும் ஆண்ட்ரியாவும் பல திரைப்படங்களில் பாடியும்,முக்கியமான கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமான காலகட்டத்தில் இவரும், ஆண்ட்ரியாவும் காதலித்து வருகின்றனர் என்றும் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்களிடம் விமர்சனத்துக்குள்ளானது.

இதையடுத்து ஆன்ட்ரியாவும், அனிருத்தும் சில காலங்கள் காதலித்து வந்த நிலையில், இருவரும் பிரிந்த செய்தி வெளியானது. அப்போது ஒரு பேட்டியில், அனிருத்திடம் அவரது காதல் தோல்வி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நான் காதலித்த பெண் என்னுடன் 6 வயது பெரிய பெண்ணாக இருந்ததால், எங்களுக்கு அதிக கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாக தெரிவித்தார்.

ஆண்ட்ரியாவை காதலிக்கும் போது, அவருக்கு 25 வயது என்றும் தனக்கு 19 வயதே இருந்ததாகவும் அனிருத் தெரிவித்திருந்தது, தற்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில் அனிருத் இசையில் வெளியான விக்ரம் திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று வரும் நிலையில், அவரது இசை இப்படத்திற்கு மேலும் ஒரு பலம் சேர்த்துள்ளது.

இதனிடையே அனிருத் கூடிய விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் ,கீர்த்தி சுரேஷும் , அனிருத்தும் தற்போது காதலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தற்போது பல வருடங்களுக்கு முன் அனிருத் கொடுத்த பேட்டி வைரலாகி முடிந்து போன ஆண்ட்ரியாவின் காதல் சாப்ட்டர் ஓபன்னாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News